Thursday, March 27, 2014

செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?

 






"ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகிறது.  தமிழகத்தை மின்மிகை மாநிலமாக நீங்கள் மாற்றுவதாகச் சொன்னதைக் கூட நாங்கள் மறந்துவிடுகிறோம். மின்வெட்டைக் குறைப்பதற்காவது நடவடிக்கை எடுங்கள். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“ அம்மாவின் பெயரால் குறைந்த விலைக்கு சாப்பாடு, தண்ணீர் எல்லாம் கொடுக்கிறீர்கள். அதுபோல தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கடுமையாக ஏற்றிய பால்விலை, பஸ் டிக்கெட், மின்சாரத்தையும் அம்மாவின் பெயரால் மலிவு விலைக்கு வழங்கி, செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“இலவசமாய் ஆடு கொடுத்ததும் போதும், மாடு கொடுத்ததும் போதும். தாங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தால் இலவசமாய் கல்வி கொடுக்க ஏற்பாடு செய்யுங்களேன். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“நான் அங்கம் வகிக்கும் மத்திய அரசு இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும்  தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும்  கச்சத் தீவை மீட்கும் என்றும் திரும்பத் திரும்ப ஒப்பிக்கிறீர்கள். அதெல்லாம் இருக்கட்டும். முதலில் இந்த அண்ணா நூலக இடமாற்றத்தை கைவிடலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“காங்கிரஸின் தவறான ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்துவிட்டதாகவும், நாட்டு மக்களெல்லாம் அவதிப்படுவதாகவும் கூட்டத்துக்கு கூட்டம் ஆவேசமாகப் பேசி வருகிறீர்கள். தவறான ஆட்சிக்கு முக்கிய காரணமே,  சில முதலாளிகளின் நலன்களுக்காக பெரும்பான்மை மக்களை வாட்டி வதைக்கும் தனியார்மயத்தை காங்கிரஸ் ஆதரித்த போக்குத்தான். தாங்கள் நல்லாட்சி செய்ய வேண்டுமென்றால் அந்த தனியார் மயத்தை கைவிட வேண்டி வரும். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“மக்கள் ஒற்றுமைக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்றும், பா.ஜ.க ஆட்சிக்கு வருவது பிளவு வாத சக்திகளை மேலும் ஊக்குவிக்கும், நாட்டுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் எச்சரிக்கின்றன.   தாங்களும் பிளவுவாத சக்திகளை முறியடித்து இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்போம் என ஜான்சிராணி போல சூளுரைக்கிறீர்கள். அப்படியென்றால் பா.ஜ.கவுடன் ஒருபோதும் கூட்டு இல்லை என அறிவிக்கலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

நன்றி : மாதவராஜ்

Thursday, March 20, 2014

9 ஜி – இவங்களும் ஜெயிலுக்கு போனவங்கதான்

9 ஜி – இவங்களும் ஜெயிலுக்கு போனவங்கதான் 

 

9 ஜி. ஆங்கிலத்தில் 9 G அதாவது Nine Gems, நவ ரத்தினங்கள். இவர்கள் சிறை சென்றவர்கள்தான். ஊழல் குற்றச்சாட்டிலோ, அடிதடி தகறாரிலோ இல்லை கட்டப்பஞ்சாயத்து நடத்தியோ இல்லை. கொலை கொள்ளை என்பதற்காகவோ அல்ல. மக்களுக்காக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக சிறை சென்றவர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஒன்பது தோழர்களுமே நவ ரத்தினங்கள்தான்.
தொகுதி
வேட்பாளர்
வடசென்னை
தோழர் உ.வாசுகி
தஞ்சாவூர்
தோழர் எஸ்.தமிழ்ச்செல்வி
கோவை
தோழர் பி.ஆர்.நடராஜன்
விழுப்புரம்
தோழர் ஜி.ஆனந்தன்
விருதுநகர்
தோழர் கே.சாமுவேல்ராஜ்
கன்னியாகுமரி
தோழர் ஏ.வி.பெல்லார்மின்
திண்டுக்கல்
தோழர் என்.பாண்டி
திருச்சி
தோழர் எஸ்.ஸ்ரீதர்
மதுரை
தோழர் பா.விக்ரமன்
இந்த ஒன்பது தோழர்களும் போராட்டத் தீயில் புடம் போடப்பட்டவர்கள். மாணவர் சங்கத் தோழராக வாலிபர் சங்கத் தோழராக, மாதர் சங்கத் தோழராக, தொழிற்சங்க ஊழியராக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஊழியராக, மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியராக எண்ணற்ற போராட்டங்களை கண்டவர்கள். பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வெற்றி கண்டவர்கள். அதற்காக பல முறை சிறை சென்றவர்கள்.
மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்தவர்கள், மக்களுக்காக வாழ்பவர்கள், சாதாரண மக்களோடு இணைந்து நிற்பவர்கள். இவர்களை விட சிறப்பான வேட்பாளர்களாக வேறு யாரும் இருக்கவும் முடியாது. மக்களுக்காக உழைப்பவர்களை மக்கள் தங்கள் பிரதிநிதியாக கண்டிப்பாக தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த நவ ரத்தினங்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வதே அத்தொகுதி மக்களுக்கு நல்லது. நல்லது நடக்க வேண்டும் என்ற விருப்பம் மக்களுக்கு மட்டும் இருக்காதா என்ன?
தேர்தலில் போட்டியிடும் ஒன்பது வேட்பாளர்களும் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Sunday, March 9, 2014

இடதுசாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டில் மாற்றம் கொண்டுவர முடியாது
வெண்மணி கூட்டத்தில் பிரகாஷ் காரத் முழக்கம்




வெண்மணி தியாகிகள் நினைவாலயம் திறப்பு : லட்சம் பேர் வீரவணக்கம்


2. வெண்மணி நினைவாலயத்தில் கம்பீரமாக உயர்ந்திருக்கும் புதிய கொடிக்கம்பத்தில் செங்கொடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா ஏற்றி வைத்தார். அருகில் பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்கள். 2. திறக்கப்பட்ட வெண்மணி நினைவாலயத்தில் குவிந்திருக்கும் தோழர்கள்...