Thursday, March 24, 2011

மீளுமா தமிழகம்!

தேர்தல் அறிக்கைகள்! , இலவச திட்டங்கள்!, 


தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே இலவச திட்டங்களை அறிவித்துள்ளன. முன்பு பெரிய அணைக் கட்டை கொண்டுவருவோம் ,மருத்துவமனை கொண்டு வருவோம் என்றாவது இந்த கட்சிகள் அறிவிப்பதுண்டு. இப்போது அனைத்துமே மருத்துவ காப்பீடு , இலவச திட்டங்கள் என்று இவர்கள்  அறிவிப்பதெல்லாம்   தனிமனிதனை  ,குடும்பத்தை சுற்றி சமூக கண்ணோட்டத்திலிருந்து  சுருங்கி தான் வாழ்ந்தால் போதும் , இந்த சமுதாயம் எக்கேடு கெட்டுப்போனால் போகட்டும் என்பது போன்ற சுயநல வட்டத்திற்குள்  நம்மை முடக்க இந்த அரசியல் கட்சிகள்  சுத்திவருவது கண்டும் நாம் விழித்தேளாவிட்டால் இந்த சமூகம் அழிந்து போவதை நம்மால் தடுக்க முடியாது, என்பதை நினைவில் நிறுத்துவோம். சமூகத்தில் உழைக்கும் மக்கள் தங்கள் சுய மரியாதையை   இழந்துவிடாமல் காப்பாற்ற  கொள்ள  வேண்டும்  எனெனில்  அது தான் நம்மிடம் உள்ள மதிப்பு  மிக்க  சொத்து ஆகும்.  

நன்றி: இயக்கம் 

Wednesday, March 16, 2011

கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்


சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் சிந்தனைகளைப் பெற்று, ஒட்டு மொத்த மானுட விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களை இப்படிப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக அல்லும் பகலுமாய் இயக்கங்கள் நடத்தி, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பும் ஒரு மகத்தான இயக்கத்திற்கு நேரும் கதி சகிக்க முடியாததாய் இருக்கிறது.  தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும்  எளிமையும், நேர்மையும் கொண்டவர்களுக்கு எப்பேர்ப்பட்ட சோதனை இது. வரலாற்றின் நெடிய பக்கங்களில் முக்கியமான பாத்திரம் வகிப்பவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிற அவலக் காட்சி இது.

மற்ற கட்சிகளைப் போல,  ‘ஐந்து வருடங்களுக்கான மக்களின்  இறுதித் தீர்ப்பாக’ கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தேர்தலை பார்ப்பதில்லை. இந்த அமைப்பின் அவலட்சணங்களையும்,, அரசின் அநியாயங்களையும் மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு மேடையாகவே  தேர்தலை பார்க்கிறார்கள். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு எதிராகத் திரள்பவர்களோடு கைகோர்த்து, பிரச்சாரம் செய்து  தங்கள் கருத்துக்களுக்கு பௌதீக சக்தி சேர்க்க  முயல்கிறார்கள். மக்களின் எதிர்ப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த பயன்படுத்துகிறார்கள். தேர்தல் கூட்டணி என்பதன் பொருளை இப்படித்தான்  புரிந்தும், செயல்படுத்தியும் வருகின்றனர் கம்யூனிஸ்டுகள். 

இப்படித்  தேர்தலில் நின்று கம்யூனிஸ்டு எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும் மற்ற கட்சியினரைபோல்  நாலு காசு பார்க்கப் போவதில்லை. எந்தக் கோட்டையையும் கட்டப் போவதில்லை (அப்படி கட்டுகிறவர்களுக்கு இயக்கத்தில் இடமிருப்பதில்லை). பஸ்ஸிலும், மொபெட்டிலுமே  வாழ்நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருப்பார்கள். தெருவோரக் கடைகளில் டீயும் பன்னையும் சாப்பிட்டுவிட்டு. “தோழர்” என  உற்சாகமாய்ச் சிரிப்பார்கள். அவ்வளவுதான். இப்படித் தேர்தலில் நிற்பதன் மூலம்  முடிந்த வரையில்,  சட்டசபைகளிலும், பாராளுமன்றங்களிலும் தங்கள் எண்ணிக்கையை அதிகரித்து, மக்களின் குரலை கூடுதல் சக்தியோடு பிரதிபலிக்கிறார்கள். அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துகிறார்கள்.  சாத்தியமானவைகளில், தலையீடு செய்து தடுத்து நிறுத்தவும் செய்கிறார்கள். ஆனால் அதுமட்டுமே  தங்கள் முக்கியமான நடவடிக்கையாகக்  கருதுவதில்லை.

எல்லாவற்றையும், மக்களிடம்  கொண்டு செல்ல வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்கிறார்கள். போராடுகிறார்கள். ஒரு ஊரின் தெருவில் சாக்கடையை சுத்தம் செய்வதிலிருந்து,  ஒரு தேசத்தின் மிகப்பெரும் பிரச்சினையான ஸ்பெக்ட்ரம்  ஊழல் வரை அவர்கள் இயக்கங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள்.  சாலைகளில்,  தெருவோரங்களில் பத்துப்பதினைந்து பேர் சிவப்புக் கொடிகளோடு  மறியலும், ஆர்ப்பாட்டமும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.    அவ்வழியே போகும்  மக்கள் இன்று அவர்களைக் கவனிக்காமல் இருக்கலாம். ஒருநாள் அவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள், ஒருநாள் அவர்கள் அணி திரள்வார்கள், ஒருநாள் தங்கள் துயரங்களுக்கான விடியலைக் கொண்டு வருவார்கள் என்னும் மகத்தான கனவோடு கம்யூனிஸ்டுகள் முஷ்டி உயர்த்தி குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  மக்கள் மேல் இருக்கிற நம்பிக்கை இது.

இதுதான் கம்யூனிஸ்டுகளின்  பாதையும் பயணமும் . இதன் போக்கில் கம்யூனிஸ்டுகள் அடையும்  துன்ப துயரங்களில் ஒன்றுதான், ஜெயலலிதா   போன்றவர்கள் தேர்தலில்  ஒதுக்கும் சீட்டுகளுக்காக  பேச்சுவார்த்தை நடத்துவது.  கருணாநிதி, ஜெயலலிதாக்களின் பின்னால் மக்கள் அணி திரண்டு நிற்பதால், இந்த அவமானங்களை கம்யூனிஸ்டுகள் பொறுத்தாக வேண்டி இருக்கிறது. அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் நடைமுறை தந்திரமாக, இந்த அழுத்தங்களை சுமக்க வேண்டி இருக்கிறது.

இந்த இடத்தில்தான் கம்யூனிஸ்டுகள் கேலிக்குரியவர்களாகவும், தரமிறங்கி நிற்பவர்களாகவும், பத்தோடு பதினொன்றாகவும்  சித்தரிக்கப்படுகிறார்கள், கிண்டலடித்திருக்கிறார்கள்.  அந்த நண்பர்களுக்கெல்லாம் என் கேள்வியும், என் பதிலும் மிக எளியது, நேரிடையானது. “கம்யூனிஸ்டுகள் யாருக்காக, எதற்காக இப்படிஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?”  இதில் தனிப்பட்ட சுயநல அரசியல் ஏதும் இருக்கிறதா, இல்லை பொதுநலம் சார்ந்த பொறுப்பு இருக்கிறதா?

Tuesday, March 15, 2011

ஆயுத இறக்குமதி முதலிடம்: பெருமைதானா?
உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக் குமதி செய்து குவிக்கும் நாடுகளில் இந்தியா முத லிடத்தில் உள்ளது என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகின் ஒட்டுமொத்த ஆயுதங்கள் விற்பனை யில் இந்தியா 9 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்வதாகவும், குறிப்பாக 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை இந்தியா பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்கு மதி செய்து குவித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக விமானப்படை மற்றும் கப்பற் படைகளை நவீனமயமாக்குகிறோம் என்ற பெய ரில் இந்தியா பல ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கில் ஆயுதங்களுக்காக செலவிட்டு வரு கிறது என்றும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட் வரும் ஆண்டில் 1.5 டிரில்லியன் டால ரைத் தாண்டும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புள்ள நிலைமையோடு ஒப்பிடும்போது இது 40 சதவீதம் அதிகம் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் அதே நேரத் தில் இவ்வளவு பெரிய தொகையை பாதுகாப்பு என்ற பெயரில் வெளிநாட்டு ஆயுத வியாபாரிக ளுக்கு வாரியிறைப்பது நியாயம்தானா என்று கேள்வி எழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.

உலகிலேயே ஆயுத ஏற்றுமதியில் அமெரிக் காதான் முதலிடத்தில் உள்ளது என்பதோடு இணைத்து இந்தியாவின் ஆயுத இறக்குமதியை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிலும் குறிப் பாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அண் மையில் இந்தியா வந்து சென்றபோது 4.1 பில்லி யன் டாலர் அளவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பாதுகாப்புத்துறைக்கென்று வாங்கப்படும் ஆயுதங்கள் மற்றும் விமானங்கள், கப்பல்கள் பற்றிய வரவு-செலவு தணிக்கைக்கு உட்படுத் தப்படுவதில்லை. சிஏஜி நடத்திய ஆய்வில்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதும், பிரதமரின் நேரடிப் பொறுப்பிலுள்ள இஸ்ரோ நடத் திய எஸ்-பேண்ட் ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட இருந்ததும் கண்டறியப் பட்டது. ஆனால் இத்தகைய தணிக்கை முறை பாதுகாப்புத்துறைக்கு இல்லை.

போபர்ஸ் பீரங்கி ஊழலில் ரூ.64 கோடி ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. ரூ.204 கோடி செலவு செய்யப்பட்டு விசாரணை நடந்த போதும் இத்தாலியைச் சேர்ந்த இடைத்தரகர் குவாத் ரோச்சி உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனை வரும் வசதியாக தப்பித்துவிட்டனர்.

பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த கார்கில் மோதலின்போது ராணுவ வீரர்களுக்கு காலனி மற்றும் மரணமடையும் வீரர்களுக்கான சவப் பெட்டியில் கூட ஊழல் நடந்தது கண்டு நாடே அதிர்ச்சியடைந்தது. பல லட்சம் கோடி ரூபாயில் நடைபெறும் ஆயுத வியாபாரத்தில் பெருமளவு முறைகேடு நடக்க வாய்ப்பு உண்டு. இந்த ஆயுத வியாபாரத்தை நியாயப்படுத்துவதற் காகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளதாக அவ்வப்போது சில ஊட கங்கள் கிளப்பிவிடுவதும், அதன்பின்னால் பன் னாட்டு ஆயுத வியாபாரிகள் இருப்பதையும் கவ னத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் அரைமணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற் கொலை செய்து கொள்வதையும் ஆயுத இறக்கு மதியையும் ஒப்பிடும் தேசபக்தியுள்ள இந்தியன் வருத்தப்படாமல் இருக்க மாட்டான்.

நன்றி : மாற்று.காம்

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் - மிகப்பெரிய மனிதப் பேரழிவுவடகிழக்கு ஜப்பானில் 8.9 என்ற ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று சுனாமி தாக்கியது. கடற்கரைச் சாலைகளில் ஏராளமான கார்கள் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டன. 8.9 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வுமையம் தெரிவித்தது. டோக்கியோவுக்கு வடகிழக்கே 230 மைல்கள் தொலைவில் 15 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதையடுத்து ஜப்பான், ரஷ்யா, மார்கஸ் தீவு மற்றும் வடக்கு மரியானாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.ஏராளமான கார்கள், கட்டடங்கள், படகுகள் உள்ளிட்டவை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. நிலநடுக்கத்தால் பல இடங்களில் தீவிபத்தும் ஏற்பட்டன.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசுபிக்கின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.கயாம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவின் ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்காண மைல்கள் தொலைவில் உள்ள டோக்கியோவில் கட்டடங்கள் பலமாக அதிர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குப் பின்னரும் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டடங்கள் அதிர்ந்துகொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு செல்போன் தொடர்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன.டோக்கியோவில் உலகின் மிகவும் பரபரப்பான ஷின்ஜுகு நிலையத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். ரயில்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.டோக்கியோவின் முக்கிய விமானநிலையம் மூடப்பட்டது.இது மிகவும் அரிதான நிலநடுக்கம், சேதங்கள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கலாம் என ஜப்பான் பேரிடர் மேலாண்மை மையத்தின் அலுவலர் ஜூனிச்சி சவதா தெரிவித்தார்.ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2.46 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் 5 சக்திவாய்ந்த நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. அதன் அளவீடுகள் 7.1 என்ற ரிக்டர் அளவில் இருந்தன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 என்ற அளவில் இருந்தது. எனினும் 8.4 ரிக்டர் அளவில் இருந்ததாக ஜப்பான் தெரிவித்தது.டோக்கியோவின் ஒடைமா மாவட்டத்தில் பெரிய கட்டடம் ஒன்று தீப்பிடித்து, புகைமண்டலமாக காட்சி அளித்தது. மத்திய டோக்கியோவில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் பிளாட்பார்ம்களில் நடந்துசென்றனர்.டோக்கியோவிலும், புறநகரிலும் 40 லட்சத்துக்கும் மேலான கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.பலர் இறந்து விட்டதாக தகவல்கள் வந்து கொண்டுருக்கின்றன. இது போன்ற இயற்கை பேரழிவு தவிர்க்க முடியாததுதான் என்றாலும் அதை வருங்காலங்களிலாவது தடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

நன்றி : இஎயக்கம்

நேற்றும் நாளையும் காணாமல் போனது
இப்பெரும் கோளத்தில் இயற்கையின் மிகச் சிறிய விபரீத அசைவு.  அவ்வளவுதான். நேற்றும், நாளையும் காணாமல் போய்விட்டது அங்கு.  நீரிலும், நெருப்பிலும், புகையிலுமாய் பெரும் மனிதக்கூட்டத்தின்  சுவாசம் நின்றுபோன வினாடிகள்  காட்சிகளாய் உறைகின்றன.  அடுக்குமாடிக் கட்டிடத்தின் உச்சியில் பெரிய படகு ஒன்று நிற்க, கட்டிடங்களும், மனிதர்களுமாய் நிறைந்திருந்த  நகரமே சுக்கல் சுக்கலாக கிழித்துப் போடப்பட்டு இருக்கிறது.  பறவைகளற்ற வெளியில் பேரழிவின்  காட்சிகள் விளிம்புகளுக்கு அப்பாலும் கடந்திருக்கின்றன.

japan tsunami tragedy 02

எஞ்சியவைகளும், எஞ்சியவர்களும் நொறுங்கியும், சிதைந்தும் போயிருக்கின்றனர். இழப்புகளின் சாட்சி போல  கறுப்பு வெள்ளைக் கோடுகளோடு பியானோ ஓரிடத்தில்  கிடக்கிறது. ஓட்டி நிற்கும் கதிர்வீச்சு பாய்ந்த பெண்ணுக்கும், அவளது தாய்க்கும் நடுவே கண்ணாடிச்சுவர் இருக்க, கால்களைத் தூக்கிக்கொண்டு பிரியத்தைக் காட்டிக்கொண்டு இருக்கிறது செல்ல நாய்.  கறுப்புச் சகதியில் தலையெட்டிப் பார்க்கும் டிஜிட்டல் போட்டோவில்  குழந்தை ஒன்று  சிரித்துக்கொண்டு இருக்கிறது. அலைகள் துரத்த  கால் நனைய விடாமல் கடலோடு  ஒருநாள் விளையாடி இருக்கலாம் அந்த உயிர்.

நன்றி : மாதவராஜ்

Tuesday, March 8, 2011

ஊழல்:

ஊழல்: பொருளாதாரத் தீவிரவாதம்
-ஆர்.எஸ்.செண்பகம்
அன்றாட வாழ்வுக்கே சாதாரண ஏழை-எளிய மக்களும், இந்த நாட்டின் தொழிலாளி வர்க்கமும் அல்லாடிக்கொண் டிருக்கும்போது நாடு அந்நிய இந்திய நிதி மூலதனத்தினால், பொருளாதார தீவிர வாதிகளால், முதலாளி வர்க்கத்தால், ஏகா திபத்தியத்தால், ஊக நிதி மூலதனத்தால் சூறையாடப்பட்டு வருகிறது. பொதுச்சொத் துக்களும், மக்களின் சேமிப்புகளும் இன் சூரன்ஸ் துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரிலும், வங்கித்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரிலும், பென்சன் மற்றும் பி.எப். துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரிலும் நிதித்துறை சீர்திருத்தங்களாக, அந்நிய நிதி முதலீடு என்ற பெயரில் சிறு வர்த்த கத்தில், தனியார் மற்றும் பொதுக்கூட்டு என்ற பெயரிலும், சூறையாடப்பட்டு வருகின்றன.

பொருளாதார தீவிரவாதிகள்

ஊழல் அரசியல்வாதிகள், ஆட்சியா ளர்கள், அதிகார வர்க்கத்தினர், வர்த்தகச் சூதாடிகள், மிகப்பெரிய தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற அனை வரும் உள்நாட்டில் கணக்கில் காட்டா மல், வரி கட்டாமல், வெளிநாடுகளில் சுவிஸ் வங்கிகளில் டிரில்லியன் டாலர் கள் கணக்கில் பதுக்கி வைத்துள்ளனர். முன்னாள் சர்வதேச நிதி நிறுவன இயக்கு நர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ரூ.5.7 இலட்சம் கோடிகள் சட்ட விரோதமாக இந்திய நாட்டை விட்டு வெளியே சென் றுள்ளது. உச்சநீதிமன்றம் இவர்களால் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப் புப்பணம் இந்த தேசத்திற்குச் சேர வேண் டிய பணம் என்றும், அதை இவர்கள் திருடியுள்ளனர் என்றும் மிகச்சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. இது வெறுமனே வரி கட்டுவதில் இருந்து தப்பிக்கும் வழி என்று மட்டும் பார்க்க வேண்டிய ஒன் றல்ல. நாட்டின் வரி சட்டத்தை ஏமாற்றி தங்களுடைய கருப்புப்பணத்தை செலா வணியாக மாற்றும் முயற்சி என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. இது “பொருளாதார தீவிரவாதத்தின் ஒரு அங்க மாகும்” பிரதம மந்திரி இவர்களுடைய பெயர் பட்டியலை வெளியிட முடியாது என் பதற்கு சர்வதேச ஒப்பந்தத்தினை மீறுவ தாகும் என்றும் தனி நபர் இரகசியத்தை பாதுகாப்பது என்றும் கூறி மறுப்பதும், அவர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் இந்த “பொருளாதார தீவிரவாதி களுக்கு” துணைபோகும் செயல் என்ப தோடு அவர்களை பாதுகாக்கும் முயற்சி யாகவும் தெரிகிறது. அரசாங்கம் இந்த பணத்தை, நாட்டிற்குத் திருப்பி வரச்செய் தால், அவர்கள் இந்த பணத்திற்கு முறை யான வரியும் கட்டினால் இந்திய தேசத் தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த முடி யும். பெட்ரோல், டீசல், விலையேற்றத்தை தடுத்து நிறுத்த முடியும். ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். உணவுப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும். விக்கிலீக்சிடம் உள்ள இந்த தனி நபர்களின் பெயர்கள், அவர்களுடைய சொத்துக்கள், அவை அவர்களுக்குக் கிடைத்த முறை என அத்தனையும் வெளிச் சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது.

தவிர்க்க முடியா அங்கமான ஊழல்

நவீன தாராளமயமாக்கல் அமலாக்கத் தின் போது, அதிக ஒளிவு மறைவின்றி நடைபெறும் பொருளாதார நடவடிக்கை களின் காரணமாகவும், அரசின் நடவடிக் கைகளை சுருக்கிக்கொள்வதன் மூலமாக வும், ஊழல் தடுத்து நிறுத்தப்படும் என்று வாதிடப்பட்டது. முதலாளித்துவம் எப்போ துமே தகுதி இல்லாதவர்களைக்கூட தன்னுடைய கூட்டாளி எனும்போது இலா பம் அதிகம் பெறும் இடத்தில் பதவியில் அமர்த்தும், வளர்த்தெடுக்கும் என்பது பொதுவான விதி மற்றும் நடைமுறை அனுபவமும் கூட. இதைத்தான் ஆங்கி லத்தில் (உயயீவையடளைஅ inாநசநவேடல செநநனள உசடிலேளைஅ)என்று சொல்கிறார்கள். உலக முதலாளித்துவ அமைப்பில் சமீப காலத் தில் நுழைந்துள்ள இந்தியா போன்ற நாடு களில் அரசாங்கத்தின் பல்வேறு அமைப் புகளில் மட்டுமல்லாது அரசமைப்பு, அர சாங்கம் முழுவதும் பரவி ஊடுருவி நிற்கக் கூடியதாக இந்த உசடிலேளைஅ உள்ளது. இதுதான் சமீபத்திய ஊழல்கள் அத்தனை யிலும் வெளிப்பட்டுள்ளது. அரசியலுக்கும் நிதி மூலதனத்திற்கும் இடையே வளர்ந்து வரும் நெருங்கிய தொடர்பு என்பது இத னை பலப்படுத்துகிறது. இதன் காரண மாகத்தான் மிகப்பெரிய வர்த்தகக்குழுமங் கள் எல்லாம் கனவிலும் நினைத்தறியா மலிவு விலைக்கு பொதுச்சொத்துக்களை கபளீகரம் செய்ய முடிகிறது. இப்படி சேரும் சொத்துக்கள் தற்போது வெளி வந்துள்ள ஊழல் முறைகளில் மட்டும் தனியாரிடம் சேர்வதில்லை. மாறாக “நேர்மையற்ற” பல வழிமுறைகளில் இப் படி மக்களின் பொதுச்சொத்துக்கள் தனி யார் முதலாளிகளால், பகாசூர கம்பெனி களால், பொருளாதார தீவிரவாதிகளால் கொள்ளையடிக்கப்படுகின்றன.

இந்த நேர்மையற்ற வழிமுறைகள் பொதுவாக வெளிப்படையாகப் பார்க்கும் போது சட்டத்திற்குப் புறம்பானதாகவோ, அல்லது ஊழல் நடப்பதாகவோ தெரியாது. உதாரணமாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடந்த முறை ஒரு உதாரணம். தனியார் முதலீட்டை பிரத்தியேகக் கவனம் செலுத்தி வளர்த்து வரும் நமது நாடு போன்ற நாடு களில் நாட்டின் அரசமைப்பு முறைகள் மெல்ல மெல்ல தளர்த்தப்படுகிறது. அல் லது தனியார் நடவடிக்கைகளை கண்கா ணிக்க வேண்டி,ய கட்டுப்படுத்த வேண் டிய, தலையீடு செய்ய வேண்டிய, ஒழுங்கு படுத்த வேண்டிய தனது செயல்பாட் டில் இருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. அதன் காரணமாகத் தான் தகுதியற்றோர் ஆட்சியில் அமர் வதும், ஊழல்கள் அரங்கேறுவதும் நடை பெறுகிறது. தாராளமயமாக்கல் என்பது அரசாங்கம் தனது தலையீட்டினை விலக் கிக்கொள்வதன் மூலம் அமலாவதல்ல. மாறாக அரசின் தலையீட்டின் வடிவத்தை தனியாருக்கு சாதகமாக மாற்றிக்கொள்வ தன் மூலம் அமலாவதாகும். முன்பெல்லாம் ஊழல் என்பது ஒரு சட்டவிரோதமான ஒரு செயலுக்கான அனுமதியை அல்லது அரசு ஆணையை பெற்றுத்தந்ததற்காக பெறப்படும் தொகை என்ற வடிவில், ஒப் பீட்டு அளவில் சிறிய அளவிலான ஊழ லாக அமையும். தற்போது ஊழலின் வடி வமே மாறியுள்ளது. மக்களுக்குச் சொந்த மான பொதுச்சொத்துக்களை மிகப் பெரிய இலாபம் பெறும் வகையில் தனியார் முத லாளிகளின் அல்லது நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றி அதில் ஒரு பங்கை ஆட்சி அதிகார வர்க்கம் பங்கிட்டுக்கொள் வது என்ற வகையில் மாறியுள்ளது. இப்படி நடைபெறும் ஊழலினால் பொதுச் சொத் துக்கள் சூறையாடப்படுவது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் தடை படுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகி றது. மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மனித வள அபிவிருத்தி என்பது கேள்விக்குறி யாகிறது. பல கோடி மக்களுக்குப் பதில் ஒரு சில தனியார் முதலாளி, முதலாளி வர்க்கம், ஆளும் வர்க்கம், நிதி மூலதனம் வளர்ச்சியடைகிறது.

- கட்டுரையாளர், நெல்லை மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர்.

மூன்று தொகுதி = ஆறு ம‌த்திய‌ ம‌ந்திரிக‌ள்!!


                                  
ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் க‌டிச்சி, க‌டைசியிலே மனுச‌னையே க‌டிச்ச‌ க‌தையால்லா இருக்கு!! ப‌ழக்க‌மான கிராம‌த்து சொல் வ‌ழக்கு இங்கே நிகழ்வாய்.

மூன்று (ஜெயிக்காத) தொகுதிக்காக‌ ஆறு ம‌த்திய‌ ம‌ந்திரிக‌ளை (இன்னும் நாலுவ‌ருஷம் இருக்கும்) ப‌தவியை வில‌க‌ச் செய்யும‌ள‌விற்கு முக வின் அர‌சிய‌ல் சாணக்கிய‌ம் இன்னும் ச‌ரிய‌வில்லை.

1, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் கொத்துக் கொத்தாய் அதுவும் பார‌ளும‌ன்ற‌ தேர்த‌ல் நேர‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்ட‌ போது துண்டிக்காத‌ உற‌வை,

2, த‌மிழ‌க‌மீன‌வ‌ர்க‌ள் இல‌ங்கை ராணுவத்தின‌ரால் சுட‌ப்பட்ட‌ போது வெட்டாத‌ உற‌வை,(ஆட்டை க‌டிச்சாச்சு)

3, 2-ஜி விசார‌ணையில் ராஜா, ப‌த‌வி வில‌கி, விசார‌ணை, சிபிஐ காவ‌ல், திகார் சிறை காவ‌ல் நீடிப்பு வ‌ரை நீளும் போதும் செய்யாத‌ வில‌க‌லை,
4,  இப்போ சிபிஐ திமுக‌ த‌லைமை அலுவ‌ல‌க‌திலுள்ள க‌லைஞர் டிவி வ‌ரையும் இரவோடு இரவாக‌ ரெய்ட் ந‌டத்தி விட்டார்க‌ள். ச‌ரத்குமார் அப்ப‌வே அறிக்கை வெளியிட்டார். (மாட்டை க‌டிச்சாச்சு). அப்புற‌மும் மத்தியில் தொட‌ர்பு அப்ப‌டியே இருக்கிற‌து. க‌ட்சியும், க‌ட்சிகார‌ங்க‌ளும் அப்ப‌டியே இருக்காங்க‌.

ஆனால் வ‌ழங்க‌ப்ப‌ட்ட‌ 60 சீட்டை, 63 ஆக கேட்ட‌ ஒரு நிக‌ழ்வுக்காய் (!!) இவ்வ‌ள‌வு காலம் (7 ஆண்டுக‌ள்) நீடித்த‌ உற‌வு துண்டிக்க‌ப் ப‌ட்ட‌தாய் அறிவிப்பு வ‌ருகிற‌து.

ஏன்?

சிபிஐ, உச்ச‌நீதி ம‌ன்ற‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌வாவ‌து, டாடா, ராடியா டேப்பு, வோல்டாஸ் சொத்து, இப்ப‌டி வெளிவந்த‌ விச‌ய‌த்திற்காக‌வாவ‌து, முத‌ல் குடும்ப‌த்தின் மூன்றாவ‌து குடும்ப‌த்தை மார்ச் 15, 17 ல் சிபிஐ விசாரித்தே ஆக வேண்டும்.

அந்த‌ மூன்றாவ‌தைக் காக்க‌ இந்த‌ மூன்றை வைத்து கோப‌ நாட‌க‌மாடி சீன் போட்டால் தான், த‌ன் க‌ட்சிக்கார‌னிட‌மாவ‌து த‌ன் ம‌திப்பை த‌க்க‌ வைக்க‌லாம்.
                                       
தன் குடுப‌த்தின் மீதான‌ சிபிஐ விசார‌ணையை 'குற்ற‌விசார‌ணை'என ஆக்காம‌ல், "அர‌சிய‌ல் ப‌கைமை", "அதிகார‌ துஷ்பிரயோக‌ம்", 'அர‌சிய‌ல் ப‌ழிவாங்க‌ல்' என்று திசை மாற்றி, க‌வுர‌மாய் சிரித்துக் கொண்டே ஊட‌க‌ங்க‌ளுக்கு போஸ் கொடுத்துக்க‌ளாம். விசார‌ணை ப‌ற்றிய தாக்க‌த்தை திசைமாற்றி த‌ன்மான‌ முக‌த்தைக் காப்பாற்றிக் கொள்ள‌லாம்.


த‌மிழ‌க ம‌க்க‌ளை ப‌ற்றிய‌ புரித‌லில் க‌தை வ‌ச‌ன‌க‌ர்த்தாவின் க‌ணிப்பு பெரும்பாலும் ச‌ரியாய் தான் இருந்திருக்கிற‌து. ம‌க்க‌ள் இன்னும் அப்ப‌டியேவா இருக்கிறார்க‌ள்?

"ம‌னோக‌ரா" காலத்திலேயே தான் இன்றைய‌ 'இளைஞ‌ன்' இருக்கிறானா?

நன்றி : எரிதழல் 

Monday, March 7, 2011

மார்ச் 8 - உலக உழைக்கும் மகளிர் தினம்


உழைக்கும் மக்களுக்கு என்னவெல்லாம் துன்பங்களை இந்த ஆளும் முதாளித்துவம் இளைக்கிறதோ அது அனைத்துமே மகளிருக்கும் பொருந்தும். முதலாளித்துவம் அதிலும் கூடுதலாக அவர்களின் பொறுப்புணர்வை பயன்படுத்தி சுரண்டுகிறது. அத்தோடு குடும்ப அமைப்பு முறையிலும் அவர்களுக்கு அநீதியே இழைக்கப்படுகிறது. இவ்வாறு இந்த அநீதிகளுக்கு எதிராக உழைக்கும் மகளிர் அணி திரண்டு இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு சாவு மணி அடித்தால் தான் இந்த அனைத்து தலைகளில் இருந்தும் உழைக்கும் மகளிர் விடுபட முடியும். முதலாளித்துவ கொடுமைகள் தீர தொண்டு செய்த தியாகிகளை நினைவு கூர்வோம். இந்த அமைப்பு முறையை தகர்க்க சபதம் பூணுவோம்.

Sunday, March 6, 2011

FOR A BETTER INDIA, ENSURE SUCCESS OF THE LEFT

என்ன ப‌திலளிக்க‌ப்போகிறோம்?


ஆட்சியாள‌ர்க‌ளை தேர்வு செய்யும் ந‌ம் ம‌க்க‌ளுக்கு த‌ங்க‌ள‌து"வாக்கின் மதிப்பு, சில‌ ஆயிர‌ங்க‌ளையும், குவாட்ட‌ர் பாட்டிலையும், பிரியாணி பொட்ட‌ல‌த்தையும், இல‌வ‌ச‌ பிச்சைப் பொருட்க‌ளை விட‌ மிக உய‌ர்ந்த‌து" என்ற‌ உண்மை உறைக்க வேண்டும். இந்த வாக்குகளால் தான் வ‌க்க‌த்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் கோடி கோடியாய், ந‌மக்கு வ‌ர‌வேண்டிய‌ வ‌ளமையிருந்து, க‌ள்ள‌த்த‌னமாய் கொள்ளை அடிக்கிறார்க‌ள் என்ற‌ கோப‌ம் வ‌ரவேண்டும்.
                                   
நமக்கு கிடைக்க‌ வேண்டிய‌, த‌ர‌மான குடிநீர், கல்வி, சாலை, சுகாதார‌ம், கழிப்ப‌றை, ப‌ஸ், ரெயில் அபிவிருத்தி, கால்ந‌டை விவாசாய வ‌ள‌ர்ச்சி போன்ற‌ நாட்டின் நல‌த்திற்கான ஆயிர‌ம் கோடி ப‌ண‌ங்க‌ளும் வ‌ள‌ங்க‌ளும், ஒரு சில‌ர‌து குடும்ப‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் மொத்த‌மாய் க‌ள்ள‌த்த‌ன‌மாய் க‌ட‌த்த‌ப்ப‌ட்டால் நாடு என்ன‌வாகும்? அவர்க‌ள் ம‌ட்டுமே நில‌ங்க‌ளை வாங்க/ஆக்கிர‌மிக்க‌ முடியும். அவ‌ர்க‌ள் ம‌ட்டுமே எல்லா வியாப‌ர‌மும் செய்வார்க‌ள். சினிமா, தொலைகாட்சி, வீட்டும‌னை, தொழிற்சாலை, வாழ்விட‌ங்க‌ள், விவ‌சாய‌ நில‌புல‌ன், ஆறு, குள‌ம், குட்டை, கால்வாய், சாலை, தோப்பு, துர‌வு அவர்க‌ளிட‌ம் ம‌ட்டுமே.

  நாமும் ந‌ம் எதிகால‌த்தை ம‌ட்டுமின்றி வரும் த‌ல‌முறைக‌ளின் வாழ்க்கையையும் கேள்வி(கேலி)க் குறியாக்குகிறோம். அவ‌ர்க‌ள், "நீங்க‌ள் "ஏன் உங்க‌ள் காலத்தில் இத்த‌கைய‌ இருண்ட‌கால‌‌ ஆட்சியைச் ச‌கித்து, கோழைக‌ளாய் இருந்தீர்க‌ள்?" எனக் கேட்க‌ப் போகும்‌ நியாய‌மான கேள்விக்கு, என்ன தார்மீக‌ப‌திலளிக்க‌ப்போகிறோம்?

நானும் ஒரு ப‌திவு போட‌த்தாண்டா செய்தேன்....என்றா!. 
சாரி.... It is not a convincing reply, even to my ears.

நன்றி :எரிதழில்எரித‌ழ‌ல்

உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி!துனிசியாவில் ஒரு காய்கறி விற்கும் அன்றாடங்காய்ச்சியின் உடலில் பற்றிய தீ, அந்த தேசத்தின் வரலாற்றையே இன்று மாற்றியிருக்கிறது.  தங்களின் வேதனைகளுக்கு, ஒரு முடிவெழுத அம்மக்கள் கூடி நின்றார்கள்.  வாட்டி வதைத்த சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்த மக்களால் காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. 

மகத்தான அந்த தருணங்களில்,  ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது. பெரும் ஜனத்திரளுக்கு நடுவே அது ஆன்மாவின் சுருதியை  மீட்டியிருக்கிறது.  ஏகபோகங்களையும், அதிகார பீடங்களையும்  வீழ்த்தி, பறவைகளை சிறகடிக்க வைத்திருக்கிறது.

அவள் பெயர் அமல் மத்லூதி!  தானே எழுதி, தானே ராகம் கொடுத்து, தானே பாடுகிறார். தேச எல்லைகளையெல்லாம் ஒரு பறவையின் சிறகசைப்பாய் அவள் குரலும், வார்த்தைகளும் கடந்து செல்வதைக் கவனியுங்கள். 

சுதந்திரமாயும், அச்சமற்றும் இருப்போரின் உருவம் நான் 
இறவா ரகசியங்களின் உருவம் நான்
இறுதிவரை போராடுபவர்களின் குரல் நான்
கூச்சல் குழப்பங்களின் நடுவே ஆழ்ந்த பொருள் நான்


அந்த நாய்கள் எம் மக்களின் உரிமைகளை விற்றார்கள் 
எம்மக்களின் அன்றாட  உணவைப் பறித்தார்கள்
கருத்துரிமையின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினார்கள்
ஒடுக்கப்பட்ட அந்த  மக்களின் உரிமைதான் நான்


நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே
நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே
ஒரு வாய்  உணவுக்கு நாம் கொடுத்த விலையை மறக்காதீர்கள்
நம் துன்ப துயரங்களுக்காண காரணங்கள் எவையென மறக்காதீர்கள்
நாம் உதவி உதவி என்று கதறிய போது
துரோகம் இழைத்து ஓடியவர்களையும் மறக்காதீர்கள்


அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே
வருஷங்கள் காதலித்த  வண்ணம்
நதிகள் தம் மடியில் புதைத்துக்கொண்ட அதன் நறுமணம்
தீப் பிழம்பை இதழ்களாய் பிரசவிக்கும்
சுதந்திரத்தை சுவாசிப்பவர்களை அறைகூவி அழைக்கும்
அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே
இருளில்  ஒளிரும் தாரகையும்  நானே
கொடுங்கோலனின் தொண்டையில் சிக்கிய முள்ளும் நானே
அக்கினியால் விசிறிவிடப்பட்ட காற்றும் நானே
மறக்கப்பட முடியாதவர்களின் ஆன்மாவும் நானே
என்றும் மரிக்கதாவர்களின் குரலும் நானே  நானே

நாம் இரும்பிலிருந்து களிமண்ணை சமைப்போம்
அதிலிருந்து எழுப்புவோம்
பறவைகளையும், வீட்டையும், தேசத்தையும்
காற்றையும் மழையையும்   
உருவெடுக்கும் ஒரு புத்தம் புது நேயத்தையும் 
  
                                                                                    
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான்
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான்
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்
 

நன்றி : மாதவராஜ் 

ஈரைப் பேனாக்கும் ஊடகங்கள் மக்கள் கடலைக் கண்டு கொள்ளாதது ஏன்?


புதுதில்லியில் பிப்ரவரி 23 ஆம் தேதியன்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் அழைப்பிற்கு இணங்கி லட்சோபலட்சத் தொழிலாளர்கள் பேரணியாக வலம் வந்தனர். இந்த மகத்தான தொழிலாளர் பேரணியை இந்திய ஊடகங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அலட்சியப்படுத்தியதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன.

நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு சுண்டுவிரலில் சுளுக்கு என்றால் அரை நாள் நிகழ்ச்சி களை நிறுத்திவிட்டு, அதுபற்றிய செய்தி களை வெளியிடும் தொலைக்காட்சி நிறு வனங்கள், 5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணிக்கு ஒரு சில விநாடிகள் ஒதுக்கிவிட்டு விட்டுவிட்டன. அச்சு ஊடகங்கள் இவ்வளவு பெரிய நிகழ்வை உள் ளூர் செய்தியாக்கிவிட்டன.
இந்தப் பேரணி நடைபெற்ற சாலையில் ஒரு பத்திரிகையின் அலுவலகம் உள்ளது. தங்களுக்கு ஒதுக்கியுள்ள அறையில் உட்கார்ந்தவாறே அப்பத்திரிகையினர் புகைப்படம் எடுத்திருக்க முடியும். ஆனால் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் புகைப் படத்தை அப்பத்திரிகை பிரசுரித்திருந்தது. இவ்வாறு பத்திரிகைகள் புறக்கணித்ததை வைத்து மெயில் டுடே பத்திரிகை கீழ்க் கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது. இந் தப்பத்திரிகையும் பேரணி செய்தியை வெளி யிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தங்களின் பிரம்மாண்ட பேரணி பற்றி மிகவும் குறைவான அளவில் பத்திரிகை கள் செய்தி வெளியிட்டது குறித்து தொழிற் சங்கத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ள னர். மேற்கு ஆசியா மற்றும் உலகின் மற்ற பகு திகளில் நடைபெறும் போராட்டங்களுக்கு நேரம் ஒதுக்கும் தேசிய தொலைக்காட்சி கள் மற்றும் நாளிதழ்கள், முதன்முறையாக மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய கூட்டுப்பேரணியைக் கண்டு கொள்ளவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகின் மற்ற பகுதிகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் எழுப்பப் படும் விலையுயர்வு, தொழிலாளர் சட்ட மீறல் கள், வேலையின்மை, சமூகப் பாதுகாப்பின்மை ஆகிய பிரச்சனைகளைத்தான் தில்லிப் பேரணியும் எழுப்பியது என்கிறார்கள்.

தேசியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தச் செய்தியை ஒளிபரப்பவில்லை. ஆனால் அதேவேளையில், வெளிநாட்டு செய்தி நிறுவனங்களான ராய்ட்டர்ஸ் மற் றும் ஏ.எப்.பி. ஆகியவை செய்தி வெளியிட் டன. பிபிசி மற்றும் சிஎன்என் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒளிபரப் பின. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மற் றும் உழைப்பாளிகளின் பிரச்சனைகளை எதிரொலித்ததாக பேரணி பற்றி இந்த ஊடகங்கள் குறிப்பிட்டன. ஆனால், இந் திய வரலாற்றில் பொதுப் பிரச்சனைகளுக் காக முதன்முறையாக அனைத்துத் தொழிற் சங்கங்களும் கைகோர்த்ததை பத்திரிகை கள் பிரசுரித்திருக்க வேண்டும் என்கிறார் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர் ந்து மேற்கொண்டு வந்த சிஐடியுவின் தலைவர் ஏ.கே.பத்மநாபன்,

மேலும் பேசிய அவர், லிபியா உள் ளிட்ட மற்ற நாடுகளில் நடக்கும் போராட் டங்களை எழுதி பக்கங்களை பத்திரிகை கள் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். துனீ சியாவில் உணவு, சுதந்திரம் மற்றும் கவு ரவத்திற்காகப் போராடுகிறார்கள். இந்தி யாவில் கவுரவமாக வாழ சமூகப் பாதுகாப்பு கோரியும், தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக்கோரியும் போராடியுள்ளனர். சொந்த நாட்டில் லட்சக்கணக்கான தொழி லாளர்களின் உணர்வுகளை இந்திய ஊட கத்துறை புரிந்து கொள்ளவில்லை என்று ஆவேசத்தோடு குறிப்பிட்டார்.

நாங்கள் அனைவரும் ஒன்று திரண் டுள்ளோம். எப்போதும் இல்லாத அள விலான இந்த ஒற்றுமையை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். பேரணி பெரும் வெற்றி பெற்றது என்கிறார் ஐ.என். டி.யு.சி.யின் தலைவரான ஜி.சஞ்சீவ ரெட்டி. பேரணியின்போது எந்தவித அசம்பாவித மும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தலை வர்கள் அக்கறை காட்டினர். பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் காவல்துறையிடம் தொடர்பு கொண்டிருந்தோம். லட்சக்கணக்கானோர் தலைநகருக்குள் வந்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது இயல்புதான் என் றார் ஏ.கே.பத்மநாபன்.

பெரிய தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறை, காப்பீட்டு நிறுவனங்கள், அரசு அலு வலகங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரி வோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம், தேசிய சுகாதாரத்திட்டம், பாரத் நிர்மாண், மதிய உணவுத்திட்டம் மற்றும் அங்கன்வாடி ஆகி யவற்றில் பணியாற்றும் ஆயிரக்கணக்கா னோர் பேரணியில் கலந்து கொண்டனர் என்று விளக்கினார் ஏ.கே.பத்மநாபன். மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதி ராக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும், தேசிய சம்மேளனங்களும் ஒன்று சேர்ந்து, இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசின் மக்கள் விரோதக் கொள் கைகளை விலக்கிக் கொள்ளுமாறு கேட் டுக் கொண்டுள்ளன என்று தெரிவித்தார் அவர்.”

இவ்வாறு மெயில் டுடே செய்தி வெளி யிட்டுள்ளது.