9 ஜி – இவங்களும் ஜெயிலுக்கு போனவங்கதான்
9 ஜி. ஆங்கிலத்தில் 9 G அதாவது Nine Gems, நவ ரத்தினங்கள். இவர்கள் சிறை சென்றவர்கள்தான். ஊழல் குற்றச்சாட்டிலோ, அடிதடி தகறாரிலோ இல்லை கட்டப்பஞ்சாயத்து நடத்தியோ இல்லை. கொலை கொள்ளை என்பதற்காகவோ அல்ல. மக்களுக்காக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக சிறை சென்றவர்கள்.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களாக
நிறுத்தப்பட்டுள்ள ஒன்பது தோழர்களுமே நவ ரத்தினங்கள்தான்.
தொகுதி
|
வேட்பாளர்
|
வடசென்னை
|
தோழர்
உ.வாசுகி
|
தஞ்சாவூர்
|
தோழர்
எஸ்.தமிழ்ச்செல்வி
|
கோவை
|
தோழர்
பி.ஆர்.நடராஜன்
|
விழுப்புரம்
|
தோழர்
ஜி.ஆனந்தன்
|
விருதுநகர்
|
தோழர்
கே.சாமுவேல்ராஜ்
|
கன்னியாகுமரி
|
தோழர்
ஏ.வி.பெல்லார்மின்
|
திண்டுக்கல்
|
தோழர்
என்.பாண்டி
|
திருச்சி
|
தோழர்
எஸ்.ஸ்ரீதர்
|
மதுரை
|
தோழர்
பா.விக்ரமன்
|
இந்த ஒன்பது
தோழர்களும் போராட்டத் தீயில் புடம் போடப்பட்டவர்கள். மாணவர் சங்கத் தோழராக வாலிபர்
சங்கத் தோழராக, மாதர் சங்கத் தோழராக, தொழிற்சங்க ஊழியராக, தீண்டாமை ஒழிப்பு
முன்னணி ஊழியராக, மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியராக எண்ணற்ற போராட்டங்களை
கண்டவர்கள். பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வெற்றி கண்டவர்கள். அதற்காக
பல முறை சிறை சென்றவர்கள்.
மக்களுடைய
பிரச்சினைகளைப் புரிந்தவர்கள், மக்களுக்காக வாழ்பவர்கள், சாதாரண மக்களோடு இணைந்து
நிற்பவர்கள். இவர்களை விட சிறப்பான வேட்பாளர்களாக வேறு யாரும் இருக்கவும்
முடியாது. மக்களுக்காக உழைப்பவர்களை மக்கள் தங்கள் பிரதிநிதியாக கண்டிப்பாக
தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த நவ
ரத்தினங்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வதே அத்தொகுதி மக்களுக்கு நல்லது.
நல்லது நடக்க வேண்டும் என்ற விருப்பம் மக்களுக்கு மட்டும் இருக்காதா என்ன?
தேர்தலில்
போட்டியிடும் ஒன்பது வேட்பாளர்களும் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
wish u the same...
ReplyDelete