Wednesday, February 26, 2014


ஆறு மாதமே போதுமே மோடி அவர்களே....


profile-04
ஆட்சிக்கு வந்தால் அறுபது மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று வழக்கம் போல ஒரு வீர வசனம் பேசியுள்ள மோடி அவர்களே, உங்களுக்கு எதற்கு அறுபது மாதங்கள் வேண்டும்?
நல்லது செய்வதற்குத்தான் அவ்வளவு அவகாசம் வேண்டும். நீங்கள் என்னவோ மக்களை பிளவு படுத்தி கலவரங்களை தூண்டப் போகிறீர்கள். இரண்டு நாளில் மூவாயிரம் பேரைக் கொன்ற சாதனைத் திலகம் அல்லவா நீங்கள்?
இந்தியா முழுதும் இருக்கிற அரசு நிலங்கள், ஏழை மக்களின் நிலங்களைப் பறித்து பெரும் பணக்காரர்களுக்கு அளிக்கப் போகின்றீர்கள்?
இருக்கிற கொஞ்ச நஞ்ச நல்ல சட்டங்களை தூக்கியெறிந்து சர்வாதிகாரியாக மாறப் போகின்றீர்கள், தேசத்தையே வெறும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு உங்களுக்கு எதற்கு அவகாசம்?
சிந்தனைக்கு  சில வார்த்தைகள்:

# இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகள் அரசின் வசமே இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் எழுதினார். ஆனால் அவரை பின்பற்றுவதாக சொல்லும் பலர் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை...

#விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் விதர்பா பகுதியின் அவுரங்காபாத் நகரில் ஒரே நாளில் 152 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் விற்பனையாகியிருக்கிறது. பென்ஸ் கார் வாங்க 7 % வட்டியில் கடன் தரும் வங்கிகள், விவசாயத்திற்கு அவசியமான ட்ராக்டர் வாங்க மட்டும் 14 % வட்டி வசூலிக்கிறார்கள்......

#450 பில்லியன் டாலர்கள் வரக்கூடிய அளவிற்கு 1986 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். ஐம்பத்தி நான்கு லட்சம் வேலைகள் உருவாகும் என்றும் சொன்னார்கள். ஆனால் அவையெல்லாம் வெறும் காகித ஒப்பந்தங்களே தவிர நிஜத்தில் எதுவும் நடக்கவில்லை என்பது உண்மை.........

#படேலின் சிலைக்கு இரும்பு சேகரிப்பவரை தேச பக்தர் என்று பாராட்டுபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கும் போராட்டத்திற்கு நிதி திரட்டுபவர்களை கம்யூனிஸ்டுகள் என்று கிண்டல் செய்கிறார்கள். இவர்களின் கண்ணோட்டத்தின்படி தேச பக்தராக இருப்பதை விட கம்யூனிஸ்டாக இருப்பதே பெருமைக்குரியது......
#நிதி அடிப்படைவாதிகளுக்கு மூலதனம்தான் மதம்.
மத அடிப்படைவாதிகளுக்கு மதம்தான் மூலதனம்.
இந்த இருவருமே இப்போது கைகோர்த்துக் கொண்டுள்ளார்கள்.
இராக்கின் சதாம் ஹூசேனை வில்லனாக சித்தரித்த ஊடகங்கள், நரேந்திர மோடியை அவ்வாறு சித்தரிப்பதில்லை. ஏனென்றால் ஊடகங்களின் சந்தைக்கு  அவர் தேவைப்படுகிறார்......
 
#முதலாளித்துவம்தான் சிக்கலின் அடிப்படை. முதலாளித்துவத்தை அகற்றும் போது மக்களும் தங்களின் பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்........

#ஊதிய உயர்வு, பென்ஷன், எல்.ஐ.சி தனியார்மயம், புதிய நியமனம் என எல்லாமே அடிப்படை கொள்கைப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், தேர்தலோடும் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் கொள்கைகளோடு இணைந்த பிரச்சினைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ், பாஜக விற்கு மாற்றாக இடதுசாரிகள் மட்டுமே இருக்க முடியும் என்பதை இன்சூரன்ஸ் ஊழியர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வலிமை அதிகரிப்பதுதான் நமக்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்......
#குத்துச்சண்டை போலவோ, மல்யுத்தம் போலவோ விளையாட்டு அரங்கில் இருவர் மோதிக் கொண்டு முடிவு செய்வதல்ல பிரதமர் பதவி......
 
 
#செக்காஸ்லோவாகியா நாட்டின் புரட்சியாளர் தோழர் ஜூலியஸ் ஃபூசிக், சிறைச்சாலைக்குள் இருந்தபடி தனது “தூக்கு மேடைக் குறிப்புகளை” எழுதத் தொடங்கிய போது “ நான் இதனை எழுதி முடிப்பதற்குள் தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கினாலும் இதன் மகிழ்ச்சியான நிறைவுப் பகுதியை எழுத லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் இன்னும் இருக்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். தொழிலாளி வர்க்கத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற அவரது நம்பிக்கையை அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. இந்திய உழைப்பாளி மக்களின் ஒரு பகுதியாக உள்ள நாமும் அதே நம்பிக்கையோடு நம் கனவுகளை செயலாக்க முன்னேறுவோம்.....
 
 
#பள்ளிப் படிப்பை தொடராத பெண் குழந்தைகளின் தேசிய சராசரி 47 % என்றால் குஜராத்தில் மட்டும் 55 %. ஆயிரம் ஆண்களுக்கு 930 பெண்கள் என்பது தேசிய சராசரி என்றால் குஜராத்தில் 886 பெண்கள்தான். இந்த அவலமான நிலையைத்தான் மோடியின் அதிசயம் என்று பாராட்டுகிறார்கள்....
 
 
#சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் போன்ற உலக அழகிகள் இருப்பதாலா இந்தியா அழகாக இருக்கிறது? மலைகளும் நதிகளும் கடல் அலைகளுமா இந்தியாவை அழகாகக் காண்பிக்கிறது? இயற்கைக் காட்சிகளும் எழில் மிகுந்த கட்டிடங்களுமா இந்தியாவின் அழகிற்குக் காரணம்?
கங்கையும் காசி விஸ்வநாதர் கோயிலும் இருக்கும் வாரணாசியை விட்டு நான் வேறு எங்கும் வர மாட்டேன் என்று புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லாகான் எப்போதும் கூறுவார்.
பர்வீன் சுல்தானா பாடும் மீரா பஜனைக்  கண்ணீர் மல்கக் கேட்காதவர்கள் யாராவது உண்டா?
கே.ஜே.யேசுதாஸின் குருவாயூரப்பன், ஐயப்பன் பாடல்களைக் கேட்டு உருகாதவரும் உண்டோ?
பல்வேறு இனம், மொழி, மதம் என்று இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று என்ற  இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரமே இந்தியாவை மிகவும் அழகாக காண்பிக்கிறது.
தாய்நாடு சொர்க்கத்தை விடவும் முக்கியமானது, புனிதமானது......
 
நன்றி : ராமன்
 
 
 

15 டாலர் கூலி கேட்டு அமெரிக்க தொழிலாளர் போராட்டம்


மெரிக்காவில் குறைந்த பட்சக் கூலியை உயர்த்துவதற்காக நடந்து வரும் தொழிலாளர் போராட்டங்கள், அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும் அசைத்துப் பார்த்திருக்கின்றன.
மெக்டொனால்ட்ஸ் முதலான துரித உணவகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி 2013-ம் ஆண்டு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வந்தார்கள். 2013 நவம்பர் மாதம் மேற்குக் கடற்கரையில் உள்ள வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த சியாட்டில் மாநகருக்கு அருகில் உள்ள சீ-டேக் என்ற நகராட்சி மன்றம், மக்கள் வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு $15 ஆக உயர்த்தியது.
ஜனவரி மாதம் சியாட்டில் நகராட்சி உறுப்பினர் தேர்தலில் 15 ஆண்டுகளாக மாநகராட்சி உறுப்பினராக இருந்த ரிச்சர்ட் கான்லின் என்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சோசலிச மாற்று (சோசலிஸ்ட் அல்டர்நேடிவ்) கட்சியைச் சேர்ந்த சாமா சாவந்த் “மணிக்கு $15 குறைந்த பட்ச கூலி” என்ற முழக்கத்தை மையமாக வைத்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.
நியூயார்க் ஆர்ப்பாட்டம்
டிசம்பர் மாதம் நியூயார்க்கில் மெக்டொனால்ட்ஸ் உணவகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயரும் குறைந்த பட்ச கூலியை மணிக்கு $15 ஆக உயர்த்துவதை ஆதரித்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான துணைக்குழுவை நியமித்திருக்கிறார். நகர மக்களில் 68% பேர் எந்த விதிவிலக்கும் இல்லாமல் உடனடியாக இந்த கூலி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருவதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இப்போது, சியாட்டில் நகரத்தில் மணிக்கு $15 கூலி என்ற கோரிக்கையை எதிர்த்து வாய் திறப்பதற்கு எந்த அரசியல்வாதிக்கும் துணிச்சல் இல்லை.
ஆனால், “வழக்கம் போல சமூகத்தின் 1%-த்தினரான முதலாளிகளும், அவர்களுக்கு ஆதரவான மாநகராட்சி உறுப்பினர்களும் இந்த நடைமுறையில் விதிவிலக்குகளையும் ஓட்டைகளையும் புகுத்துவதோடு மட்டுமல்லாமல், கால வரம்பையும் தள்ளிப் போட முயற்சித்து வருவதாக” சாமா சாவந்த் குற்றம் சாட்டியிருக்கிறார். “நாம் தெருக்களில் நடத்திய போராட்டங்களினால்தான் இந்த சட்டம் மாநகராட்சியின் பரிசீலனைக்குப் போயிருக்கிறது. தொடர்ந்த போராட்டங்கள் மூலம்தான் முதலாளிகள் நம்மை ஏமாற்றாமல் காத்துக் கொள்ள முடியும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
“விதிவிலக்கு கூடாது, ஓட்டைகள் கூடாது, தாமதம் கூடாது, இப்போதே 15 டாலர் வேண்டும்” என்ற முழக்கத்துடன்
  • உடனடியாக கூலி உயர்வு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – நமது வீட்டு வாடகைகள் கொடுப்பதை இனியும் தள்ளிப் போட முடியாது
  • கூலி உயர்வை எந்த விதிவிலக்கும் இல்லாமல் அனைத்து நிறுவனங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் – சிறு நிறுவனங்களை பாதுகாப்பது முக்கியமானது என்றாலும் அது உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அடமானம் வைத்து செய்யப்படக் கூடாது.
  • டிப்ஸ் தொகையை சேர்க்காமல் குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட வேண்டும்
என்ற கோரிக்கைகளுடன் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
$15 உடனடியாக
குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு $15 பெற போராடுவோம்.
இந்த போராட்டங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஆளும் வர்க்கங்களை அசைத்துப் பார்த்துள்ளது. அதிபர் ஒபாமா, மத்திய அரசின் எதிர்கால ஒப்பந்ததாரர் பணிகள் அனைத்திலும் குறைந்த பட்ச கூலி மணிக்கு $10.10 ஆக இருக்க வேண்டும் என்று நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். இந்தக் மோசடியான உத்தரவு அளிக்கும் கூலி உயர்வு, தொழிலாளர்களின் கோரிக்கையான மணிக்கு $15-ஐ விட குறைவானது என்பது மட்டுமின்றி, இது அமெரிக்க மத்திய அரசின் ஒப்பந்தப் பணிகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது.
இந்த ஆண்டு பிற்பகுதியில் வரவிருக்கும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் குறைந்தபட்ச ஊதியத்தை நாடு முழுவதும்  $10.10 ஆக உயர்த்துவதை தேர்தல் பிரச்சாரமாக முன்னெடுக்க ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், உழைக்கும் மக்களின் பிரச்சனையை பேசி ஓட்டுப் பொறுக்கி விட்டு அக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதற்கு எதுவும் செய்யாமல் ‘குடியரசுக் கட்சியினர் ஒத்துழைக்கவில்லை’ என்று நாடகமாடுவதுதான் ஜனநாயகக் கட்சியின் நடைமுறையாக உள்ளது.
குடியரசுக் கட்சியினரோ, ‘குறைந்த பட்ச கூலி என்பது அடிப்படை திறன் தேவைப்படும் வேலைக்கான கூலி. அவரவர் திறமைக்கு ஏற்ப பின்னர் கூடுதல் சம்பாதிக்க முடியும்’ என்று “மெரிட்” வாதம் புரிகின்றனர். ‘குறைந்த பட்ச கூலியை உயர்த்திக் கொடுத்தால் விலைவாசி கணிசமாக உயரும்’ என்றும் ‘பெருமளவில் வேலை இழப்புகள் ஏற்படும்’ என்றும் பயமுறுத்துகின்றனர்.
உடனடியாக $15
சியாட்டிலில் நடக்கும் உடனடியாக $15 போராட்டத்துக்கான திட்டமிடல் கூட்டம்.
கலிபோர்னியாவின் ஓக்லாந்து நகரின் மேயர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் டான் சீகல் $15 கூலி சட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் சூழலில் அந்த ஊரின் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு, ‘குறைந்தபட்சக் கூலி $12.25 ஆக உயர்த்தப்பட வேண்டும்’ என்று கோரியிருக்கிறது. அதாவது முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகவே தொழிற்சங்கங்கள் தமது சமரச வேலையை ஆரம்பித்திருக்கின்றன. ஜனநாயகக் கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த சங்கங்கள், அக்கட்சிக்கு ஏற்புடையதாக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நீர்த்துப் போக வைக்கின்றன.
“$15 என்ற கோரிக்கையின் அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கே வர மாட்டோம்” என்று தேசிய உணவகங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஸ்காட் டீ ஃபீபே மிரட்டியிருக்கிறார். “அமெரிக்காவில் தொழில்துறை நலிந்த நிலையில் துரித உணவு மற்றும் சேவைத் துறைகளில்தான் வேலை வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. அந்தத் துறைகளில் கூலியை உயர்த்தி வேலை வாய்ப்புகளை குறைப்பது முட்டாள்தனம்” என்று தேசிய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் மூத்த துணைத்தலைவர் டேவிட் பிரெஞ்ச் குமுறியிருக்கிறார்.
ஆனால், குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு $15 ஆக உயர்த்துவதன் மூலமாக துரித உணவுகளின் விலை 10% மட்டுமே உயரும் ($3 மதிப்பிலான பர்கர் விலை $3.30 வரை உயரலாம்) என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கென் ஜேக்கப்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆய்வின்படி பற்றாக்குறை கூலி பெறும் துரித உணவு ஊழியர்கள் ஆண்டுக்கு $7 பில்லியன் அரசு உதவி பெறுகிறார்கள். கூலி உயர்வின் மூலம் ஊழியர்கள் அரசு மானியங்களை நாடுவதை குறைத்துக் கொண்டு அரசுக்கு பணம் மிச்சமாகும். ஆனால் முதலாளிகளின் பணத்தை சேமிப்பதற்கு மட்டும் அரசு மானியங்கள் கொடுக்கிறது. உண்மையில் இது மக்களின் நலனுக்காக கொடுக்கப்படுவது இல்லை.
மேலும், “கடந்த 90 ஆண்டு அனுபவத்தில் கூலி உயர்வு வழங்கியதால் வேலை வாய்ப்புகள் குறைந்ததாக சரித்திரமே இல்லை” என்று தேசிய சேவைத்துறை தொழிற்சங்கத் தலைவர் திருமதி ஹென்ரி கூறுகிறார். முதலாளிகள் தமது லாப வேட்டையை அதிகரிப்பதற்காக முதலீடுகளை நாடு விட்டு நாடு கொண்டு போவதாலும், வேலைகளில் எந்திரங்களை புகுத்தி தானியக்கத்தை செயல்படுத்துவதாலும்தான் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. பல துரித உணவகங்கள் ஏற்கனவே குளிர்பானங்கள் வாங்குவதில் சுயசேவை முறையை ஆரம்பித்திருக்கின்றன. கணினி திரையில் வாடிக்கையாளரே ஆர்டர் கொடுத்து சமையலறைக்கு தகவல் போவது என்ற முறையையும் செயல்படுத்தியிருக்கின்றன. எனவே, கூலி உயர்வுதான் வேலை வாய்ப்பை பாதிக்கும் என்ற வாதமும் தவறானது.
குறைந்த பட்ச ஊதியம்
குறைந்த பட்ச ஊதியம்- வரலாற்று புள்ளிவிபரம்.
1930-களின் பொருளாதார பெருமந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் முதன்முதலாக குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு $0.25 ஆக வரையறுக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் இன்றைய மதிப்பு $4.13. படிப்படியாக உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் 1968-ல் உச்சபட்ச மதிப்பான $1.60 (இன்றைய மதிப்பு $10.72)-ஐ எட்டியது. அதன் பிறகு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து இன்று $7.25 ஆக உள்ளது. அதாவது 1968-ஐ விட இப்போது 32% குறைவாக உள்ளது.
வாஷிங்டன் மாநிலத்தில் தற்போதைய குறைந்த பட்ச கூலி பெறும் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கும் $19,385 டாலர் ஆண்டு வருமானத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருப்பது கூட சாத்தியமில்லை. சியாட்டிலில் வாடகைக்கு வீடு எடுக்கவும் பிற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் போதுமான ஆண்டு வருமானம் $31,000-ஐ பெறுவதற்காக மணிக்கு $15 குறைந்த பட்ச கூலி கேட்டு தொழிலாளர்கள் போராடுகின்றனர்.
“நியாயமான கூலி கொடுக்காமல் மோசடி செய்யும் மெக்டொனால்ட்சை புறக்கணிப்போம்” என்ற முழக்கத்தோடு, “பாய்காட் மெக்பாவர்ட்டி” (மெக்வறுமையை புறக்கணிப்போம்) என்ற பெயரில் சியாட்டில் நகரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடைகளுக்கு முன்பு பிப்ரவரி 20-ம் தேதி மறியல்கள் நடைபெற்றன.
சியாட்டில் போராட்டம்
சியாட்டில் போராட்டம் : வீட்டு வாடகை கொடுப்பதை தள்ளிப் போட முடியாது (மாநகராட்சி உறுப்பினர் சாமா சாவந்த்)
அந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டானி பெல்ப்ஸ் என்ற ஊழியர், “மணிக்கு $9.32 ஊதியத்தில் ஒரு குழந்தையை வளர்க்கும் அனுபவம் எப்படியானது என்று தெரியுமா? அது மிக மிகக் கொடுமையானது. நான் வேலைக்குப் போகும் போது குழந்தையை பராமரிக்கும் சேவை, குடியிருப்பதற்கு வீடு, மருத்துவ வசதி என எதுவும் கட்டுப்படி ஆவதில்லை. மாறாக 2 படுக்கையறை, 1 குளியலறை கொண்ட வீட்டை 7 பேருடன் பகிர்ந்து கொண்டு என் குழந்தையுடன் நான் வசிக்கிறேன். வாழ்வின் குறைந்த பட்ச தேவைகளை பெறுவதற்காக நான் $15 குறைந்தபட்ச ஊதியம் கோரி போராடுகிறேன்.” என்றார்.
மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் விற்பனையை அதிகரிப்பதற்கான உத்தியாக   வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பர்கர் அல்லது வறுவலை கேட்ட அளவை விட அதிகரிக்கட்டுமா (super size your order) என்று ஊழியர்களை கேட்க வைக்கும் வழக்கத்தை பின்பற்றி “என் ஊதியத்தை உடனே பெரியதாக்கு ((super size my salary now)” என்ற முழக்கம் தெருவை நிறைத்தது. அடுத்தக் கட்ட போராட்டமாக மார்ச் 7 முதல் 15 வரையிலான வாரத்தை நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தும் “நடவடிக்கை வாரமாக” கடைப்பிடிக்கப் போவதாக தொழிலாளர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்த மறியல் போராட்டங்களால் கதி கலங்கிய உள்ளூர் மெக்டொனால்ட்ஸ் உணவக முதலாளிகள், ‘ஊதிய உயர்வு கொடுப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை’ என்று அறிவித்திருக்கின்றனர். இந்தப் போராட்டங்களின் தாக்கம் வாஷிங்டன் மாநிலம் முழுவதும் எதிரொலித்துள்ளது. மாநில ஆளுனர் குறைந்த பட்ச கூலியை மணிக்கு $13 ஆக அதிகரிப்பதை ஆதரிப்பதாக கூறியிருக்கிறார்.
            போராட்டங்களின் மூலம்தான் தொழிலாளர் வர்க்கம் தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது அமெரிக்க தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டம் நமக்கு உணர்த்தும் உண்மை.

Sunday, February 16, 2014

மோசடியே தொழிலாகிப் போனது மோடி கூட்டத்தாருக்கு

எத்தனை பேர் எவ்வளவு திட்டினாலும் அதைப் பற்றி
கவலையே இல்லாமல்  தொடர்ந்து ஏதாவது மோசடி
செய்வதே மோடி கூட்டத்தாரின் பிழைப்பாகி விட்டது.

அம்பலப்பட்டு அசிங்கப்பட்டாலும் அதையெல்லாம்
பொருட்படுத்தாமல் எருமை மாட்டுத் தோலோடு
மீண்டும் மீண்டும் செப்பிடு வித்தைகள் காண்பிப்பார்கள்
என்பதற்கு கீழே உள்ள படம்தான் உதாரணம்.இன்னொன்றும் இதில் அடங்கி உள்ளது. ஓபாமா
படத்தை போடுவதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மீது மோடிக்கு உள்ள காதலும் வெளிப்படுகிறது.

தேர்தல் வர வர இன்னும் எத்தனை ப்ராட் படமெல்லாம்
வரப் போகிறதோ?

நன்றி :  ராமன்

கடன் கட்ட துப்பில்லை, பதினைந்து கோடி ரூபாய்க்கு யுவராஜை ஏலம் எடுப்பாராம்.

கிங் பிஷர் விமானக் கம்பெனி துவக்க கடன் வாங்கிய வகையில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை இருநூற்றி ஐம்பது கோடிகளுக்கு மேல் பாக்கி.
விமானங்களை நிறுத்தி வைத்ததற்கு வாடகைக் கட்டணமாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய பாக்கி பல கோடிகள்.
விமானங்களை இயக்க எரிபொருள் வழங்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏராளமான கோடி ரூபாய் பாக்கி.
வேலை பார்த்தும் பல மாத ஊதியத்தை வாங்காமல் ஏமாந்து நிற்கும் விமானிகள், ஏர்-ஹோஸ்டஸ், இதர ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியமும் கோடிகளில்தான்.
இதெல்லாம் சாராய மன்னன் விஜய் மல்லய்யா செலுத்த வேண்டிய கடன் தொகை விவரங்கள். ஆனால் இத்தனை பாக்கியையும் அடைப்பது பற்றி கவலையே இல்லாமல்
கர்னாடாகாவில் உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு எண்பது லட்சத்தில் தங்கக் கதவு செய்து போடுகிறார்.
திருப்பதி வெங்கடாசலபதிக்கு  மூன்று கோடி ரூபாயில் வைரக் கிரீடம் போடுகிறார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படிகளையும் தங்கத்தால் அலங்கரிக்கிறார்.
இதோ நேற்று தனது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக யுவராஜ்சிங்கை பதினைந்து கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறார்.
ஒரு புறம் ஊதாரிச் செலவு. இன்னொரு புறம் பாக்கித் தொகையை செலுத்துவது பற்றி கவலையே பட மாட்டார். இவரிடம் கடனை திருப்பி கட்டு என்று சொல்லக் கூட ப.சிதம்பரத்திற்கு தைரியம் கிடையாது. வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்பதால் பொங்கி எழும் வீராதி வீரர்கள் இந்த அராஜகம் பற்றியெல்லாம் வாய் திறக்கவே மாட்டார்கள்.
ஒரு லட்சம், இரண்டு லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தர முடியாத விவசாயிகள் தற்கொலை செய்வதையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் மானஸ்தர்கள். விஜய் மல்லய்யா???????????????????????
 
நன்றி : ராமன்.

மிஸ்டர் கேஜ்ரிவால், ஊழலின் ஊற்றுக்கண் எது என்பது இப்போதாவது புரிந்ததா?

 

எதிர்பார்த்தது போலவே அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆட்சி அல்பாயுசாகவே
முடிந்துள்ளது. அம்பானியை பாதுகாக்க காங்கிரசும் பாஜகவும் கரம்
கோர்த்துக் கொண்டுள்ளார்கள் என்று குற்றம் சாட்டி பதவி விலகினார்.

யாருக்கு எதிராக, யாருடைய ஊழல்களுக்கு எதிராக தேர்தலில்
பிரச்சாரம் செய்தாரோ, அவர்களுடைய ஆதரவோடு ஆட்சி அமைத்த
அந்த நிமிடத்திலிருந்தே அந்த நாற்காலி ஆடிக் கொண்டுத்தான்
இருந்தது.

அன்னா ஹசாரேவும் சரி, அவரது சீடராய் வந்து அவரை மிஞ்சிய
அரவிந்த் கேஜ்ரிவாலும் சரி ஊழல் என்று சொல்வது அரசியல்வாதிகள்
மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரைத்தான். ஊழல்
எனும் நாணயத்தின் மறு பக்கம் பற்றி அவர்கள் கவலைப்பட்டதே
கிடையாது.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல்வேறு ஊழல் வழக்குகள்
வந்துள்ளது. ஆனால் லஞ்சம் வாங்கிய அதிகாரியையோ அல்லது
அமைச்சரையோ குறை சொல்லும் யாரும் லஞ்சம் கொடுத்த
அந்த பெரிய மனிதர்களைப் பற்றி வாய் திறந்ததே இல்லை.

லஞ்சம் யார் வாங்கினாலும் தவறு, அனைவரும் சட்டத்தின்படி
தண்டிக்கப்பட வேண்டும். நூறு ரூபாய் லஞ்சம் வாங்கும் சாதாரண
ஊழியர்கள் மீது சாட்டையை வீசும் இந்த சமூகம் கோடிகளில்
லஞ்சம் வாங்கும் மனிதர்களுக்கு வெண்சாமரம் வீசும் அவலமும்
இந்த தேசத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

கோடிகளில் ஊழல் செய்த அதிகாரிகள், அமைச்சர்களாவது
பொது வெளியில் அம்பலப்படுகிறார்கள், சில சமயம்
திஹாருக்கும் செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு லஞ்சம்
அளித்த அந்த ஊழலுக்கு அடிப்படையாக இருந்த பெரிய
முதலாளிகள், பெரும் நிறுவனங்கள் பெயர் வெளியே வருவதே
இல்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் ஊழலில் ஏற்பட்டுள்ள
பரிணாம வளர்ச்சி.

சில பல கோடிகளில் இருந்த ஊழல் தொகை இன்று பல
ஆயிரம், லட்சம் கோடிகளில் உயரத் தொடங்கியது உலகமயமாக்கல்
கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பிறகே. எல்லை கடந்த
பேராசைக்கு நெறிமுறைகள் இரையாகி விட்டது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறிக்கு தீனி போடும்
அரசுகள், அதற்கு ஏற்றார்போல கொள்கைகளை வகுத்தும் 
உதவுகிறார்கள், சலுகைகளும் வழங்குகிறார்கள், வசூலிக்க வேண்டிய
தொகைகளையும் வசூலிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதைத்தவிர
ஊழல் ஆறுகள் எப்போதுமே ஜீவநதியாக ஓடிக் கொண்டே
இருக்கின்றன. 

ஆனால் அன்னா ஹசாராவேவும் கேஜ்ரிவாலும் இந்த கார்ப்பரேட்
கொள்கைகளைப் பற்றி இதுநாள் வரை வாய் திறந்ததே இல்லை.

முதல் முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் அம்பானிக்காக 
காங்கிரசும் பாஜகவும் கரம் கோர்த்துக் கொண்டுள்ளார்கள்
என்ற உண்மையை, நாங்கள் பல்லாண்டுகளாக சொல்லிக் கொண்டே
இருக்கிற அந்த யதார்த்ததை சொல்லியுள்ளார்.

கார்ப்பரேட்டுகள் மட்டும் காரணமல்ல, உலக மயக் கொள்கைகள்தான்
ஊழலின் ஊற்றுக்கண் என்பதை இப்போதாவது புரிந்து 
கொண்டீர்களா? மிஸ்டர் அரவிந்த் கேஜ்ரிவால்?

  நன்றி : ராமன்.

Sunday, February 2, 2014

ALL INDIA INSURANCE EMPLOYEES' ASSOCIATION
23rd GENERAL CONFERENCE
AT A GLANCE
A WELL ORGANISED CONFERENCE
The Nagpur LICEU and the WZIEA made all efforts for the successful conduct of the conference. Nearly 400 volunteers worked tirelessly for months to make the necessary arrangements and take care of the logistics of such a massive conference. The determination and commitment was seen on the face of every volunteer. These comrades earned the much deserved appreciation and gratitude of the delegates and the observers. The cultural troupe came up with some wonderful and revolutionary songs each day of the conference.  On 22nd January a program was organized to show the rich culture of Maharashtra. On 23rd January the program “100 years of Hindi Cinema” enthralled the audience. The AIIEA congratulates and thanks the NDLICEU, WZIEA and the volunteers for the wonderful work done.
The 23rd General Conference concluded on 24th January 2014 with delegates and observers joining the singing troupe to confidently say ‘Hum Honge Kamyab’. It was a very successful conference- be it the level of participation, debate or the sheer organization.  The 23rd Conference witnessed tremendous enthusiasm to strengthen the organization to help it meet the challenges of the times. It was this confidence that made the 23rd Conference gave a call to ‘challenge the challenges’. Long Live the 23rd General Conference!  Long Live AIIEA!GLIMPSES OF SUCCESSFUL 23RD CONFERENCE OF AIIEA

New General secretary Com V Ramesh- flanked by Com Amanullakhan and K Venugopal 

Com Chandrasekar Bose - Founder President of AIIEA addressing the session

Delegates session- Indepth discussions 


Com Sitaram Yechuri M.P- Inagural address

Photo: Com Girija from sziea.....is first women all inda office bearer of Aiiea .
PROUD MOMENT FOR SZIEF- Com M Girija elected as Joint secretary of AIIEA- First woman officebearer of AIIEA