Sunday, February 16, 2014

கடன் கட்ட துப்பில்லை, பதினைந்து கோடி ரூபாய்க்கு யுவராஜை ஏலம் எடுப்பாராம்.

கிங் பிஷர் விமானக் கம்பெனி துவக்க கடன் வாங்கிய வகையில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை இருநூற்றி ஐம்பது கோடிகளுக்கு மேல் பாக்கி.
விமானங்களை நிறுத்தி வைத்ததற்கு வாடகைக் கட்டணமாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய பாக்கி பல கோடிகள்.
விமானங்களை இயக்க எரிபொருள் வழங்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏராளமான கோடி ரூபாய் பாக்கி.
வேலை பார்த்தும் பல மாத ஊதியத்தை வாங்காமல் ஏமாந்து நிற்கும் விமானிகள், ஏர்-ஹோஸ்டஸ், இதர ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியமும் கோடிகளில்தான்.
இதெல்லாம் சாராய மன்னன் விஜய் மல்லய்யா செலுத்த வேண்டிய கடன் தொகை விவரங்கள். ஆனால் இத்தனை பாக்கியையும் அடைப்பது பற்றி கவலையே இல்லாமல்
கர்னாடாகாவில் உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு எண்பது லட்சத்தில் தங்கக் கதவு செய்து போடுகிறார்.
திருப்பதி வெங்கடாசலபதிக்கு  மூன்று கோடி ரூபாயில் வைரக் கிரீடம் போடுகிறார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படிகளையும் தங்கத்தால் அலங்கரிக்கிறார்.
இதோ நேற்று தனது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக யுவராஜ்சிங்கை பதினைந்து கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறார்.
ஒரு புறம் ஊதாரிச் செலவு. இன்னொரு புறம் பாக்கித் தொகையை செலுத்துவது பற்றி கவலையே பட மாட்டார். இவரிடம் கடனை திருப்பி கட்டு என்று சொல்லக் கூட ப.சிதம்பரத்திற்கு தைரியம் கிடையாது. வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்பதால் பொங்கி எழும் வீராதி வீரர்கள் இந்த அராஜகம் பற்றியெல்லாம் வாய் திறக்கவே மாட்டார்கள்.
ஒரு லட்சம், இரண்டு லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தர முடியாத விவசாயிகள் தற்கொலை செய்வதையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் மானஸ்தர்கள். விஜய் மல்லய்யா???????????????????????
 
நன்றி : ராமன்.

No comments:

Post a Comment