இரையாக வேண்டியது நாமல்ல - ஆர்.எஸ்.செண்பகம்
அக்டோபர் 29ம் தேதி கோயம்புத்தூர் நகரில் முஸ்கின் மற்றும் அவளுடைய சகோ தரன் ஹிருத்திக் ஆகியோர் கால் டாக்சி டிரைவர் மோகனால் கடத்தப்பட்டு அந்த பெண் குழந்தை பாலியல் வன்முறைக்குட் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள். அவளுடைய சகோதரனும் கொலை செய்யப் பட்டுள்ளான். மோகன் என்பவருக்கு ஒரு தனியார் வங்கியில் ரூ. 2 லட்சம் கடன் இருந் துள்ளது. இந்தத் தொகையை எளிதில் பெறு வதற்கு துருப்புச் சீட்டாக இந்த குழந்தை களை கடத்தியுள்ளார் என்று பின்னர் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு முடிவதற்குள்ளேயே சென்னை யில் மற்றுமொரு நிகழ்வு, இதில் கடத்தப்பட்ட கீர்த்திவாசன் என்ற அந்த சிறுவன் தமிழகக் காவல் துறையினரால் உயிருடன் மீட்கப்பட் டுள்ளான். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களில் ஒருவரான விஜய குமார் என்ற இன் ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ., படித்த பட்டதாரி, இவருக்கும் இவருடைய நண்பர் பிரபு என்ற மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்த டிப்ள மோ பட்டதாரி இளைஞருக்கும் தொழில் துவங்க மிகப்பெரிய அளவில் பணம் தேவைப் பட்டுள்ளது.
இந்த இரண்டு வழக்குகளிலும் குற்ற வாளிகள் ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் குழந்தைகளுக்கு அறிமுகமானவர்களாக அல்லது குழந்தைகளைப் பற்றி, அவர்களது குடும்பங்களைப் பற்றி, அவர்களது நடவடிக் கைகளைப் பற்றி அறிந்தவர்களாக இருந்தனர் என்பது நாம் கவனிக்கத்தக்கது. இவை யெல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வந்த போது பெற்றோர்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் ஒரு அச்சத்தை கிளப்பிவிட்டுள் ளது. ஆனால் 1998 முதலே (இது போன்ற சம் பவங்கள் அதிகரித்த காலகட்டம் என்ற வகையில்) பள்ளிகளிலும். பள்ளிசெல்லும் வழிகளிலும் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குட்படுத் தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் ஆசிரியர்களால், சக மாணவர்களால், குழந் தைகளுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர் களால் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பதும் சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிகழ்வுகளை “சம்பவங்கள்” என்று சாதாரணமாகச் சொல்லி விட முடியாது. இந்த வன்முறைகள் அரங்கேறிய இடங்களும், சூழ்நிலைகளும், பல் வேறு கேள்விகளை நம் முன்னே (பெற் றோர்கள் என்ற முறையிலும், இந்த சமூகத்தின் பிரஜைகள் என்ற முறை யிலும்) எழுப்பியுள்ளது.
நாம் நம் பிள்ளைகளுக்கு குழந்தைகள் உரிமை பற்றிய விழிப்புணர்வை தகுந்த வய தில் தகுந்த வகையில் ஏற்படுத்தியிருக் கிறோமா? சமுதாயப் புறச்சூழலை அவர் களை புரிந்து கொள்ளச் செய்துள்ளோடு சமு தாயச் சீர்குலைவுகளையும் அவற்றிலிருந்து விடுபடும் முறைகளையும், தற்காப்பு நடவடிக் கைகளையும் அறிவுறுத்தி இருக்கிறோமா? அதேபோன்று சிறந்த கல்வி தரும் பள்ளி என்று உயர்ந்த மதிப்பெண்களை எடுக்க வைக்கின்ற பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் பெற்றோர்கள் அந்த பள்ளிகளில், பள்ளி செல் லும் வழிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் நடைமுறைகள் உள்ள னவா என்பதையும், மாணவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தும் திட்டவட்ட மான செயல்முறைகள் உள்ளனவா என்பதை யும் கவனிக்கிறோமா? இதையெல்லாம் நாமும் செய்ய வேண்டியுள்ளது, பள்ளிகளும் கவனிக்க வேண்டியுள்ளது, பெற்றோர்- ஆசிரியர் பங்களிப்பும் அவசியமாகிறது. சமூக ஆர்வலர்கள் இன்னும் ஒரு படி மேலான சிந் தனையுடன் நாம் யோசிக்க வேண்டிய மற்று மொரு விஷயத்தையும் முன் வைக்கின்றனர். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 2005 பள்ளிகளில் குழந்தைகளுக்கு உரிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதும். ஒரு குழந்தை பள்ளிச் சீருடையில் வீட்டை விட்டு வெளியே வரும் நொடி முதல் அந்த குழந்தையின் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகத்திற்கும் பொறுப்புள்ளது என்பதுமே அவர்கள் முன் வைக்கின்ற கருத்து.
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் சமூக சீர்கேடு களுக்கு மிக எளிதாக இரையாகின்றனர் என்பதுதான் வேதனை தரும் விஷயமாக உள்ளது. பெண்களுக்கும், வயோதிகர்களுக் கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பினை தர வேண்டிய நமது அரசாங்கம் இந்த பிரச்ச னைகளின் ஆணி வேரினை கண்டறிய வேண் டும், பிரச்சனைகளுக்கான காரணிகளை வேரடி மண்ணோடு களைய வேண்டும்.
கட்டுரையாளர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, நெல்லை மாவட்ட அமைப்பாளர்.

மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திருநெல்வேலி கோட்ட சங்க இணை செயலாளர்.
No comments:
Post a Comment