ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் நம் மக்களுக்கு தங்களது"வாக்கின் மதிப்பு, சில ஆயிரங்களையும், குவாட்டர் பாட்டிலையும், பிரியாணி பொட்டலத்தையும், இலவச பிச்சைப் பொருட்களை விட மிக உயர்ந்தது" என்ற உண்மை உறைக்க வேண்டும். இந்த வாக்குகளால் தான் வக்கத்த அரசியல்வாதிகள் கோடி கோடியாய், நமக்கு வரவேண்டிய வளமையிருந்து, கள்ளத்தனமாய் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற கோபம் வரவேண்டும்.
நமக்கு கிடைக்க வேண்டிய, தரமான குடிநீர், கல்வி, சாலை, சுகாதாரம், கழிப்பறை, பஸ், ரெயில் அபிவிருத்தி, கால்நடை விவாசாய வளர்ச்சி போன்ற நாட்டின் நலத்திற்கான ஆயிரம் கோடி பணங்களும் வளங்களும், ஒரு சிலரது குடும்பங்களுக்கு மட்டும் மொத்தமாய் கள்ளத்தனமாய் கடத்தப்பட்டால் நாடு என்னவாகும்? அவர்கள் மட்டுமே நிலங்களை வாங்க/ஆக்கிரமிக்க முடியும். அவர்கள் மட்டுமே எல்லா வியாபரமும் செய்வார்கள். சினிமா, தொலைகாட்சி, வீட்டுமனை, தொழிற்சாலை, வாழ்விடங்கள், விவசாய நிலபுலன், ஆறு, குளம், குட்டை, கால்வாய், சாலை, தோப்பு, துரவு அவர்களிடம் மட்டுமே.
நாமும் நம் எதிகாலத்தை மட்டுமின்றி வரும் தலமுறைகளின் வாழ்க்கையையும் கேள்வி(கேலி)க் குறியாக்குகிறோம். அவர்கள், "நீங்கள் "ஏன் உங்கள் காலத்தில் இத்தகைய இருண்டகால ஆட்சியைச் சகித்து, கோழைகளாய் இருந்தீர்கள்?" எனக் கேட்கப் போகும் நியாயமான கேள்விக்கு, என்ன தார்மீகபதிலளிக்கப்போகிறோம்?
நானும் ஒரு பதிவு போடத்தாண்டா செய்தேன்....என்றா!.
சாரி.... It is not a convincing reply, even to my ears.
நன்றி :எரிதழில்எரிதழல்
No comments:
Post a Comment