Tuesday, March 15, 2011

ஆயுத இறக்குமதி முதலிடம்: பெருமைதானா?




உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக் குமதி செய்து குவிக்கும் நாடுகளில் இந்தியா முத லிடத்தில் உள்ளது என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகின் ஒட்டுமொத்த ஆயுதங்கள் விற்பனை யில் இந்தியா 9 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்வதாகவும், குறிப்பாக 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை இந்தியா பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை இறக்கு மதி செய்து குவித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக விமானப்படை மற்றும் கப்பற் படைகளை நவீனமயமாக்குகிறோம் என்ற பெய ரில் இந்தியா பல ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கில் ஆயுதங்களுக்காக செலவிட்டு வரு கிறது என்றும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட் வரும் ஆண்டில் 1.5 டிரில்லியன் டால ரைத் தாண்டும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புள்ள நிலைமையோடு ஒப்பிடும்போது இது 40 சதவீதம் அதிகம் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் அதே நேரத் தில் இவ்வளவு பெரிய தொகையை பாதுகாப்பு என்ற பெயரில் வெளிநாட்டு ஆயுத வியாபாரிக ளுக்கு வாரியிறைப்பது நியாயம்தானா என்று கேள்வி எழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.

உலகிலேயே ஆயுத ஏற்றுமதியில் அமெரிக் காதான் முதலிடத்தில் உள்ளது என்பதோடு இணைத்து இந்தியாவின் ஆயுத இறக்குமதியை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிலும் குறிப் பாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அண் மையில் இந்தியா வந்து சென்றபோது 4.1 பில்லி யன் டாலர் அளவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பாதுகாப்புத்துறைக்கென்று வாங்கப்படும் ஆயுதங்கள் மற்றும் விமானங்கள், கப்பல்கள் பற்றிய வரவு-செலவு தணிக்கைக்கு உட்படுத் தப்படுவதில்லை. சிஏஜி நடத்திய ஆய்வில்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதும், பிரதமரின் நேரடிப் பொறுப்பிலுள்ள இஸ்ரோ நடத் திய எஸ்-பேண்ட் ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட இருந்ததும் கண்டறியப் பட்டது. ஆனால் இத்தகைய தணிக்கை முறை பாதுகாப்புத்துறைக்கு இல்லை.

போபர்ஸ் பீரங்கி ஊழலில் ரூ.64 கோடி ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. ரூ.204 கோடி செலவு செய்யப்பட்டு விசாரணை நடந்த போதும் இத்தாலியைச் சேர்ந்த இடைத்தரகர் குவாத் ரோச்சி உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனை வரும் வசதியாக தப்பித்துவிட்டனர்.

பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த கார்கில் மோதலின்போது ராணுவ வீரர்களுக்கு காலனி மற்றும் மரணமடையும் வீரர்களுக்கான சவப் பெட்டியில் கூட ஊழல் நடந்தது கண்டு நாடே அதிர்ச்சியடைந்தது. பல லட்சம் கோடி ரூபாயில் நடைபெறும் ஆயுத வியாபாரத்தில் பெருமளவு முறைகேடு நடக்க வாய்ப்பு உண்டு. இந்த ஆயுத வியாபாரத்தை நியாயப்படுத்துவதற் காகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளதாக அவ்வப்போது சில ஊட கங்கள் கிளப்பிவிடுவதும், அதன்பின்னால் பன் னாட்டு ஆயுத வியாபாரிகள் இருப்பதையும் கவ னத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் அரைமணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற் கொலை செய்து கொள்வதையும் ஆயுத இறக்கு மதியையும் ஒப்பிடும் தேசபக்தியுள்ள இந்தியன் வருத்தப்படாமல் இருக்க மாட்டான்.

நன்றி : மாற்று.காம்

No comments:

Post a Comment