ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, கடைசியிலே மனுசனையே கடிச்ச கதையால்லா இருக்கு!! பழக்கமான கிராமத்து சொல் வழக்கு இங்கே நிகழ்வாய்.
மூன்று (ஜெயிக்காத) தொகுதிக்காக ஆறு மத்திய மந்திரிகளை (இன்னும் நாலுவருஷம் இருக்கும்) பதவியை விலகச் செய்யுமளவிற்கு முக வின் அரசியல் சாணக்கியம் இன்னும் சரியவில்லை.
1, ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாய் அதுவும் பாரளுமன்ற தேர்தல் நேரத்தில் கொல்லப்பட்ட போது துண்டிக்காத உறவை,
2, தமிழகமீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்ட போது வெட்டாத உறவை,(ஆட்டை கடிச்சாச்சு)
3, 2-ஜி விசாரணையில் ராஜா, பதவி விலகி, விசாரணை, சிபிஐ காவல், திகார் சிறை காவல் நீடிப்பு வரை நீளும் போதும் செய்யாத விலகலை,
4, இப்போ சிபிஐ திமுக தலைமை அலுவலகதிலுள்ள கலைஞர் டிவி வரையும் இரவோடு இரவாக ரெய்ட் நடத்தி விட்டார்கள். சரத்குமார் அப்பவே அறிக்கை வெளியிட்டார். (மாட்டை கடிச்சாச்சு). அப்புறமும் மத்தியில் தொடர்பு அப்படியே இருக்கிறது. கட்சியும், கட்சிகாரங்களும் அப்படியே இருக்காங்க.
ஆனால் வழங்கப்பட்ட 60 சீட்டை, 63 ஆக கேட்ட ஒரு நிகழ்வுக்காய் (!!) இவ்வளவு காலம் (7 ஆண்டுகள்) நீடித்த உறவு துண்டிக்கப் பட்டதாய் அறிவிப்பு வருகிறது.
ஏன்?
சிபிஐ, உச்சநீதி மன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவாவது, டாடா, ராடியா டேப்பு, வோல்டாஸ் சொத்து, இப்படி வெளிவந்த விசயத்திற்காகவாவது, முதல் குடும்பத்தின் மூன்றாவது குடும்பத்தை மார்ச் 15, 17 ல் சிபிஐ விசாரித்தே ஆக வேண்டும்.
அந்த மூன்றாவதைக் காக்க இந்த மூன்றை வைத்து கோப நாடகமாடி சீன் போட்டால் தான், தன் கட்சிக்காரனிடமாவது தன் மதிப்பை தக்க வைக்கலாம்.
தன் குடுபத்தின் மீதான சிபிஐ விசாரணையை 'குற்றவிசாரணை'என ஆக்காமல், "அரசியல் பகைமை", "அதிகார துஷ்பிரயோகம்", 'அரசியல் பழிவாங்கல்' என்று திசை மாற்றி, கவுரமாய் சிரித்துக் கொண்டே ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துக்களாம். விசாரணை பற்றிய தாக்கத்தை திசைமாற்றி தன்மான முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
தமிழக மக்களை பற்றிய புரிதலில் கதை வசனகர்த்தாவின் கணிப்பு பெரும்பாலும் சரியாய் தான் இருந்திருக்கிறது. மக்கள் இன்னும் அப்படியேவா இருக்கிறார்கள்?
"மனோகரா" காலத்திலேயே தான் இன்றைய 'இளைஞன்' இருக்கிறானா?
நன்றி : எரிதழல்
No comments:
Post a Comment