Tuesday, March 15, 2011

நேற்றும் நாளையும் காணாமல் போனது




இப்பெரும் கோளத்தில் இயற்கையின் மிகச் சிறிய விபரீத அசைவு.  அவ்வளவுதான். நேற்றும், நாளையும் காணாமல் போய்விட்டது அங்கு.  நீரிலும், நெருப்பிலும், புகையிலுமாய் பெரும் மனிதக்கூட்டத்தின்  சுவாசம் நின்றுபோன வினாடிகள்  காட்சிகளாய் உறைகின்றன.  அடுக்குமாடிக் கட்டிடத்தின் உச்சியில் பெரிய படகு ஒன்று நிற்க, கட்டிடங்களும், மனிதர்களுமாய் நிறைந்திருந்த  நகரமே சுக்கல் சுக்கலாக கிழித்துப் போடப்பட்டு இருக்கிறது.  பறவைகளற்ற வெளியில் பேரழிவின்  காட்சிகள் விளிம்புகளுக்கு அப்பாலும் கடந்திருக்கின்றன.

japan tsunami tragedy 02

எஞ்சியவைகளும், எஞ்சியவர்களும் நொறுங்கியும், சிதைந்தும் போயிருக்கின்றனர். இழப்புகளின் சாட்சி போல  கறுப்பு வெள்ளைக் கோடுகளோடு பியானோ ஓரிடத்தில்  கிடக்கிறது. ஓட்டி நிற்கும் கதிர்வீச்சு பாய்ந்த பெண்ணுக்கும், அவளது தாய்க்கும் நடுவே கண்ணாடிச்சுவர் இருக்க, கால்களைத் தூக்கிக்கொண்டு பிரியத்தைக் காட்டிக்கொண்டு இருக்கிறது செல்ல நாய்.  கறுப்புச் சகதியில் தலையெட்டிப் பார்க்கும் டிஜிட்டல் போட்டோவில்  குழந்தை ஒன்று  சிரித்துக்கொண்டு இருக்கிறது. அலைகள் துரத்த  கால் நனைய விடாமல் கடலோடு  ஒருநாள் விளையாடி இருக்கலாம் அந்த உயிர்.

நன்றி : மாதவராஜ்

No comments:

Post a Comment