Saturday, May 24, 2014
Thursday, March 27, 2014
செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?
"ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகிறது. தமிழகத்தை மின்மிகை மாநிலமாக நீங்கள் மாற்றுவதாகச் சொன்னதைக் கூட நாங்கள் மறந்துவிடுகிறோம். மின்வெட்டைக் குறைப்பதற்காவது நடவடிக்கை எடுங்கள். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“ அம்மாவின் பெயரால் குறைந்த விலைக்கு சாப்பாடு, தண்ணீர் எல்லாம் கொடுக்கிறீர்கள். அதுபோல தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கடுமையாக ஏற்றிய பால்விலை, பஸ் டிக்கெட், மின்சாரத்தையும் அம்மாவின் பெயரால் மலிவு விலைக்கு வழங்கி, செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“இலவசமாய் ஆடு கொடுத்ததும் போதும், மாடு கொடுத்ததும் போதும். தாங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தால் இலவசமாய் கல்வி கொடுக்க ஏற்பாடு செய்யுங்களேன். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“நான் அங்கம் வகிக்கும் மத்திய அரசு இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கச்சத் தீவை மீட்கும் என்றும் திரும்பத் திரும்ப ஒப்பிக்கிறீர்கள். அதெல்லாம் இருக்கட்டும். முதலில் இந்த அண்ணா நூலக இடமாற்றத்தை கைவிடலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“காங்கிரஸின் தவறான ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்துவிட்டதாகவும், நாட்டு மக்களெல்லாம் அவதிப்படுவதாகவும் கூட்டத்துக்கு கூட்டம் ஆவேசமாகப் பேசி வருகிறீர்கள். தவறான ஆட்சிக்கு முக்கிய காரணமே, சில முதலாளிகளின் நலன்களுக்காக பெரும்பான்மை மக்களை வாட்டி வதைக்கும் தனியார்மயத்தை காங்கிரஸ் ஆதரித்த போக்குத்தான். தாங்கள் நல்லாட்சி செய்ய வேண்டுமென்றால் அந்த தனியார் மயத்தை கைவிட வேண்டி வரும். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“மக்கள் ஒற்றுமைக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்றும், பா.ஜ.க ஆட்சிக்கு வருவது பிளவு வாத சக்திகளை மேலும் ஊக்குவிக்கும், நாட்டுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் எச்சரிக்கின்றன. தாங்களும் பிளவுவாத சக்திகளை முறியடித்து இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்போம் என ஜான்சிராணி போல சூளுரைக்கிறீர்கள். அப்படியென்றால் பா.ஜ.கவுடன் ஒருபோதும் கூட்டு இல்லை என அறிவிக்கலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
நன்றி : மாதவராஜ்
Saturday, March 22, 2014
Thursday, March 20, 2014
9 ஜி – இவங்களும் ஜெயிலுக்கு போனவங்கதான்
9 ஜி – இவங்களும் ஜெயிலுக்கு போனவங்கதான்
9 ஜி. ஆங்கிலத்தில் 9 G அதாவது Nine Gems, நவ ரத்தினங்கள். இவர்கள் சிறை சென்றவர்கள்தான். ஊழல் குற்றச்சாட்டிலோ, அடிதடி தகறாரிலோ இல்லை கட்டப்பஞ்சாயத்து நடத்தியோ இல்லை. கொலை கொள்ளை என்பதற்காகவோ அல்ல. மக்களுக்காக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக சிறை சென்றவர்கள்.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களாக
நிறுத்தப்பட்டுள்ள ஒன்பது தோழர்களுமே நவ ரத்தினங்கள்தான்.
தொகுதி
|
வேட்பாளர்
|
வடசென்னை
|
தோழர்
உ.வாசுகி
|
தஞ்சாவூர்
|
தோழர்
எஸ்.தமிழ்ச்செல்வி
|
கோவை
|
தோழர்
பி.ஆர்.நடராஜன்
|
விழுப்புரம்
|
தோழர்
ஜி.ஆனந்தன்
|
விருதுநகர்
|
தோழர்
கே.சாமுவேல்ராஜ்
|
கன்னியாகுமரி
|
தோழர்
ஏ.வி.பெல்லார்மின்
|
திண்டுக்கல்
|
தோழர்
என்.பாண்டி
|
திருச்சி
|
தோழர்
எஸ்.ஸ்ரீதர்
|
மதுரை
|
தோழர்
பா.விக்ரமன்
|
இந்த ஒன்பது
தோழர்களும் போராட்டத் தீயில் புடம் போடப்பட்டவர்கள். மாணவர் சங்கத் தோழராக வாலிபர்
சங்கத் தோழராக, மாதர் சங்கத் தோழராக, தொழிற்சங்க ஊழியராக, தீண்டாமை ஒழிப்பு
முன்னணி ஊழியராக, மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியராக எண்ணற்ற போராட்டங்களை
கண்டவர்கள். பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வெற்றி கண்டவர்கள். அதற்காக
பல முறை சிறை சென்றவர்கள்.
மக்களுடைய
பிரச்சினைகளைப் புரிந்தவர்கள், மக்களுக்காக வாழ்பவர்கள், சாதாரண மக்களோடு இணைந்து
நிற்பவர்கள். இவர்களை விட சிறப்பான வேட்பாளர்களாக வேறு யாரும் இருக்கவும்
முடியாது. மக்களுக்காக உழைப்பவர்களை மக்கள் தங்கள் பிரதிநிதியாக கண்டிப்பாக
தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த நவ
ரத்தினங்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வதே அத்தொகுதி மக்களுக்கு நல்லது.
நல்லது நடக்க வேண்டும் என்ற விருப்பம் மக்களுக்கு மட்டும் இருக்காதா என்ன?
தேர்தலில்
போட்டியிடும் ஒன்பது வேட்பாளர்களும் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
Sunday, March 9, 2014
வெண்மணி தியாகிகள் நினைவாலயம் திறப்பு : லட்சம் பேர் வீரவணக்கம்
2. வெண்மணி நினைவாலயத்தில் கம்பீரமாக உயர்ந்திருக்கும் புதிய கொடிக்கம்பத்தில் செங்கொடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா ஏற்றி வைத்தார். அருகில் பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்கள். 2. திறக்கப்பட்ட வெண்மணி நினைவாலயத்தில் குவிந்திருக்கும் தோழர்கள்...
2. வெண்மணி நினைவாலயத்தில் கம்பீரமாக உயர்ந்திருக்கும் புதிய கொடிக்கம்பத்தில் செங்கொடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா ஏற்றி வைத்தார். அருகில் பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்கள். 2. திறக்கப்பட்ட வெண்மணி நினைவாலயத்தில் குவிந்திருக்கும் தோழர்கள்...
Wednesday, February 26, 2014
ஆறு மாதமே போதுமே மோடி அவர்களே....
ஆட்சிக்கு
வந்தால் அறுபது மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று வழக்கம் போல ஒரு
வீர வசனம் பேசியுள்ள மோடி அவர்களே, உங்களுக்கு எதற்கு அறுபது மாதங்கள் வேண்டும்?
நல்லது
செய்வதற்குத்தான் அவ்வளவு அவகாசம் வேண்டும். நீங்கள் என்னவோ மக்களை பிளவு படுத்தி
கலவரங்களை தூண்டப் போகிறீர்கள். இரண்டு நாளில் மூவாயிரம் பேரைக் கொன்ற சாதனைத்
திலகம் அல்லவா நீங்கள்?
இந்தியா
முழுதும் இருக்கிற அரசு நிலங்கள், ஏழை மக்களின் நிலங்களைப் பறித்து பெரும்
பணக்காரர்களுக்கு அளிக்கப் போகின்றீர்கள்?
இருக்கிற
கொஞ்ச நஞ்ச நல்ல சட்டங்களை தூக்கியெறிந்து சர்வாதிகாரியாக மாறப் போகின்றீர்கள்,
தேசத்தையே வெறும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு உங்களுக்கு எதற்கு அவகாசம்?
சிந்தனைக்கு சில வார்த்தைகள்:
# இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகள் அரசின் வசமே இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் எழுதினார். ஆனால் அவரை பின்பற்றுவதாக சொல்லும் பலர் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை...
#விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் விதர்பா பகுதியின் அவுரங்காபாத் நகரில் ஒரே நாளில் 152 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் விற்பனையாகியிருக்கிறது. பென்ஸ் கார் வாங்க 7 % வட்டியில் கடன் தரும் வங்கிகள், விவசாயத்திற்கு அவசியமான ட்ராக்டர் வாங்க மட்டும் 14 % வட்டி வசூலிக்கிறார்கள்......
இராக்கின்
சதாம் ஹூசேனை வில்லனாக சித்தரித்த ஊடகங்கள், நரேந்திர மோடியை அவ்வாறு
சித்தரிப்பதில்லை. ஏனென்றால் ஊடகங்களின் சந்தைக்கு அவர் தேவைப்படுகிறார்......
தாய்நாடு
சொர்க்கத்தை விடவும் முக்கியமானது, புனிதமானது......
# இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகள் அரசின் வசமே இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் எழுதினார். ஆனால் அவரை பின்பற்றுவதாக சொல்லும் பலர் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை...
#விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் விதர்பா பகுதியின் அவுரங்காபாத் நகரில் ஒரே நாளில் 152 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் விற்பனையாகியிருக்கிறது. பென்ஸ் கார் வாங்க 7 % வட்டியில் கடன் தரும் வங்கிகள், விவசாயத்திற்கு அவசியமான ட்ராக்டர் வாங்க மட்டும் 14 % வட்டி வசூலிக்கிறார்கள்......
#450
பில்லியன் டாலர்கள் வரக்கூடிய அளவிற்கு 1986 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்
நரேந்திர மோடி கையெழுத்திட்டார். ஐம்பத்தி நான்கு லட்சம் வேலைகள் உருவாகும்
என்றும் சொன்னார்கள். ஆனால் அவையெல்லாம் வெறும் காகித ஒப்பந்தங்களே தவிர நிஜத்தில்
எதுவும் நடக்கவில்லை என்பது உண்மை.........
#படேலின்
சிலைக்கு இரும்பு சேகரிப்பவரை தேச பக்தர் என்று பாராட்டுபவர்கள், பொதுத்துறை
நிறுவனங்களை பாதுகாக்கும் போராட்டத்திற்கு நிதி திரட்டுபவர்களை கம்யூனிஸ்டுகள்
என்று கிண்டல் செய்கிறார்கள். இவர்களின் கண்ணோட்டத்தின்படி தேச பக்தராக இருப்பதை
விட கம்யூனிஸ்டாக இருப்பதே பெருமைக்குரியது......
#நிதி
அடிப்படைவாதிகளுக்கு மூலதனம்தான் மதம்.
மத
அடிப்படைவாதிகளுக்கு மதம்தான் மூலதனம்.
இந்த
இருவருமே இப்போது கைகோர்த்துக் கொண்டுள்ளார்கள்.
#முதலாளித்துவம்தான்
சிக்கலின் அடிப்படை. முதலாளித்துவத்தை அகற்றும் போது மக்களும் தங்களின் பிரச்சினைகளிலிருந்து
விடுவிக்கப்படுவார்கள்........
#ஊதிய
உயர்வு, பென்ஷன், எல்.ஐ.சி தனியார்மயம், புதிய நியமனம் என எல்லாமே அடிப்படை
கொள்கைப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், தேர்தலோடும் தேர்ந்தெடுக்கப்படும்
அரசின் கொள்கைகளோடு இணைந்த பிரச்சினைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ், பாஜக விற்கு மாற்றாக இடதுசாரிகள் மட்டுமே இருக்க முடியும் என்பதை
இன்சூரன்ஸ் ஊழியர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வலிமை
அதிகரிப்பதுதான் நமக்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்......
#குத்துச்சண்டை
போலவோ, மல்யுத்தம் போலவோ விளையாட்டு அரங்கில் இருவர் மோதிக் கொண்டு முடிவு
செய்வதல்ல பிரதமர் பதவி......
#செக்காஸ்லோவாகியா
நாட்டின் புரட்சியாளர் தோழர் ஜூலியஸ் ஃபூசிக், சிறைச்சாலைக்குள் இருந்தபடி தனது
“தூக்கு மேடைக் குறிப்புகளை” எழுதத் தொடங்கிய போது “ நான் இதனை எழுதி
முடிப்பதற்குள் தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கினாலும் இதன் மகிழ்ச்சியான
நிறைவுப் பகுதியை எழுத லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் இன்னும் இருக்கிறார்கள்”
என்று குறிப்பிடுகிறார். தொழிலாளி வர்க்கத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற
அவரது நம்பிக்கையை அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. இந்திய உழைப்பாளி
மக்களின் ஒரு பகுதியாக உள்ள நாமும் அதே நம்பிக்கையோடு நம் கனவுகளை செயலாக்க
முன்னேறுவோம்.....
#பள்ளிப்
படிப்பை தொடராத பெண் குழந்தைகளின் தேசிய சராசரி 47 % என்றால் குஜராத்தில் மட்டும்
55 %. ஆயிரம் ஆண்களுக்கு 930 பெண்கள் என்பது தேசிய சராசரி என்றால் குஜராத்தில் 886
பெண்கள்தான். இந்த அவலமான நிலையைத்தான் மோடியின் அதிசயம் என்று பாராட்டுகிறார்கள்....
#சுஷ்மிதா
சென், ஐஸ்வர்யா ராய் போன்ற உலக அழகிகள் இருப்பதாலா இந்தியா அழகாக இருக்கிறது?
மலைகளும் நதிகளும் கடல் அலைகளுமா இந்தியாவை அழகாகக் காண்பிக்கிறது? இயற்கைக்
காட்சிகளும் எழில் மிகுந்த கட்டிடங்களுமா இந்தியாவின் அழகிற்குக் காரணம்?
கங்கையும்
காசி விஸ்வநாதர் கோயிலும் இருக்கும் வாரணாசியை விட்டு நான் வேறு எங்கும் வர
மாட்டேன் என்று புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லாகான் எப்போதும் கூறுவார்.
பர்வீன்
சுல்தானா பாடும் மீரா பஜனைக் கண்ணீர்
மல்கக் கேட்காதவர்கள் யாராவது உண்டா?
கே.ஜே.யேசுதாஸின்
குருவாயூரப்பன், ஐயப்பன் பாடல்களைக் கேட்டு உருகாதவரும் உண்டோ?
பல்வேறு
இனம், மொழி, மதம் என்று இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று என்ற இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரமே இந்தியாவை
மிகவும் அழகாக காண்பிக்கிறது.
நன்றி : ராமன்
15 டாலர் கூலி கேட்டு அமெரிக்க தொழிலாளர் போராட்டம்
அமெரிக்காவில் குறைந்த பட்சக் கூலியை உயர்த்துவதற்காக நடந்து வரும் தொழிலாளர் போராட்டங்கள், அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும் அசைத்துப் பார்த்திருக்கின்றன.
மெக்டொனால்ட்ஸ் முதலான துரித உணவகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி 2013-ம் ஆண்டு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வந்தார்கள். 2013 நவம்பர் மாதம் மேற்குக் கடற்கரையில் உள்ள வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த சியாட்டில் மாநகருக்கு அருகில் உள்ள சீ-டேக் என்ற நகராட்சி மன்றம், மக்கள் வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு $15 ஆக உயர்த்தியது.
ஜனவரி மாதம் சியாட்டில் நகராட்சி உறுப்பினர் தேர்தலில் 15 ஆண்டுகளாக மாநகராட்சி உறுப்பினராக இருந்த ரிச்சர்ட் கான்லின் என்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சோசலிச மாற்று (சோசலிஸ்ட் அல்டர்நேடிவ்) கட்சியைச் சேர்ந்த சாமா சாவந்த் “மணிக்கு $15 குறைந்த பட்ச கூலி” என்ற முழக்கத்தை மையமாக வைத்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயரும் குறைந்த பட்ச கூலியை மணிக்கு $15 ஆக உயர்த்துவதை ஆதரித்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான துணைக்குழுவை நியமித்திருக்கிறார். நகர மக்களில் 68% பேர் எந்த விதிவிலக்கும் இல்லாமல் உடனடியாக இந்த கூலி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருவதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இப்போது, சியாட்டில் நகரத்தில் மணிக்கு $15 கூலி என்ற கோரிக்கையை எதிர்த்து வாய் திறப்பதற்கு எந்த அரசியல்வாதிக்கும் துணிச்சல் இல்லை.
ஆனால், “வழக்கம் போல சமூகத்தின் 1%-த்தினரான முதலாளிகளும், அவர்களுக்கு ஆதரவான மாநகராட்சி உறுப்பினர்களும் இந்த நடைமுறையில் விதிவிலக்குகளையும் ஓட்டைகளையும் புகுத்துவதோடு மட்டுமல்லாமல், கால வரம்பையும் தள்ளிப் போட முயற்சித்து வருவதாக” சாமா சாவந்த் குற்றம் சாட்டியிருக்கிறார். “நாம் தெருக்களில் நடத்திய போராட்டங்களினால்தான் இந்த சட்டம் மாநகராட்சியின் பரிசீலனைக்குப் போயிருக்கிறது. தொடர்ந்த போராட்டங்கள் மூலம்தான் முதலாளிகள் நம்மை ஏமாற்றாமல் காத்துக் கொள்ள முடியும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
“விதிவிலக்கு கூடாது, ஓட்டைகள் கூடாது, தாமதம் கூடாது, இப்போதே 15 டாலர் வேண்டும்” என்ற முழக்கத்துடன்
- உடனடியாக கூலி உயர்வு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – நமது வீட்டு வாடகைகள் கொடுப்பதை இனியும் தள்ளிப் போட முடியாது
- கூலி உயர்வை எந்த விதிவிலக்கும் இல்லாமல் அனைத்து நிறுவனங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் – சிறு நிறுவனங்களை பாதுகாப்பது முக்கியமானது என்றாலும் அது உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அடமானம் வைத்து செய்யப்படக் கூடாது.
- டிப்ஸ் தொகையை சேர்க்காமல் குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட வேண்டும்
இந்த போராட்டங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஆளும் வர்க்கங்களை அசைத்துப் பார்த்துள்ளது. அதிபர் ஒபாமா, மத்திய அரசின் எதிர்கால ஒப்பந்ததாரர் பணிகள் அனைத்திலும் குறைந்த பட்ச கூலி மணிக்கு $10.10 ஆக இருக்க வேண்டும் என்று நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். இந்தக் மோசடியான உத்தரவு அளிக்கும் கூலி உயர்வு, தொழிலாளர்களின் கோரிக்கையான மணிக்கு $15-ஐ விட குறைவானது என்பது மட்டுமின்றி, இது அமெரிக்க மத்திய அரசின் ஒப்பந்தப் பணிகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது.
இந்த ஆண்டு பிற்பகுதியில் வரவிருக்கும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் குறைந்தபட்ச ஊதியத்தை நாடு முழுவதும் $10.10 ஆக உயர்த்துவதை தேர்தல் பிரச்சாரமாக முன்னெடுக்க ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், உழைக்கும் மக்களின் பிரச்சனையை பேசி ஓட்டுப் பொறுக்கி விட்டு அக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதற்கு எதுவும் செய்யாமல் ‘குடியரசுக் கட்சியினர் ஒத்துழைக்கவில்லை’ என்று நாடகமாடுவதுதான் ஜனநாயகக் கட்சியின் நடைமுறையாக உள்ளது.
குடியரசுக் கட்சியினரோ, ‘குறைந்த பட்ச கூலி என்பது அடிப்படை திறன் தேவைப்படும் வேலைக்கான கூலி. அவரவர் திறமைக்கு ஏற்ப பின்னர் கூடுதல் சம்பாதிக்க முடியும்’ என்று “மெரிட்” வாதம் புரிகின்றனர். ‘குறைந்த பட்ச கூலியை உயர்த்திக் கொடுத்தால் விலைவாசி கணிசமாக உயரும்’ என்றும் ‘பெருமளவில் வேலை இழப்புகள் ஏற்படும்’ என்றும் பயமுறுத்துகின்றனர்.
கலிபோர்னியாவின் ஓக்லாந்து நகரின் மேயர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் டான் சீகல் $15 கூலி சட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் சூழலில் அந்த ஊரின் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு, ‘குறைந்தபட்சக் கூலி $12.25 ஆக உயர்த்தப்பட வேண்டும்’ என்று கோரியிருக்கிறது. அதாவது முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகவே தொழிற்சங்கங்கள் தமது சமரச வேலையை ஆரம்பித்திருக்கின்றன. ஜனநாயகக் கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த சங்கங்கள், அக்கட்சிக்கு ஏற்புடையதாக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நீர்த்துப் போக வைக்கின்றன.
“$15 என்ற கோரிக்கையின் அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கே வர மாட்டோம்” என்று தேசிய உணவகங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஸ்காட் டீ ஃபீபே மிரட்டியிருக்கிறார். “அமெரிக்காவில் தொழில்துறை நலிந்த நிலையில் துரித உணவு மற்றும் சேவைத் துறைகளில்தான் வேலை வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. அந்தத் துறைகளில் கூலியை உயர்த்தி வேலை வாய்ப்புகளை குறைப்பது முட்டாள்தனம்” என்று தேசிய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் மூத்த துணைத்தலைவர் டேவிட் பிரெஞ்ச் குமுறியிருக்கிறார்.
ஆனால், குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு $15 ஆக உயர்த்துவதன் மூலமாக துரித உணவுகளின் விலை 10% மட்டுமே உயரும் ($3 மதிப்பிலான பர்கர் விலை $3.30 வரை உயரலாம்) என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கென் ஜேக்கப்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆய்வின்படி பற்றாக்குறை கூலி பெறும் துரித உணவு ஊழியர்கள் ஆண்டுக்கு $7 பில்லியன் அரசு உதவி பெறுகிறார்கள். கூலி உயர்வின் மூலம் ஊழியர்கள் அரசு மானியங்களை நாடுவதை குறைத்துக் கொண்டு அரசுக்கு பணம் மிச்சமாகும். ஆனால் முதலாளிகளின் பணத்தை சேமிப்பதற்கு மட்டும் அரசு மானியங்கள் கொடுக்கிறது. உண்மையில் இது மக்களின் நலனுக்காக கொடுக்கப்படுவது இல்லை.
மேலும், “கடந்த 90 ஆண்டு அனுபவத்தில் கூலி உயர்வு வழங்கியதால் வேலை வாய்ப்புகள் குறைந்ததாக சரித்திரமே இல்லை” என்று தேசிய சேவைத்துறை தொழிற்சங்கத் தலைவர் திருமதி ஹென்ரி கூறுகிறார். முதலாளிகள் தமது லாப வேட்டையை அதிகரிப்பதற்காக முதலீடுகளை நாடு விட்டு நாடு கொண்டு போவதாலும், வேலைகளில் எந்திரங்களை புகுத்தி தானியக்கத்தை செயல்படுத்துவதாலும்தான் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. பல துரித உணவகங்கள் ஏற்கனவே குளிர்பானங்கள் வாங்குவதில் சுயசேவை முறையை ஆரம்பித்திருக்கின்றன. கணினி திரையில் வாடிக்கையாளரே ஆர்டர் கொடுத்து சமையலறைக்கு தகவல் போவது என்ற முறையையும் செயல்படுத்தியிருக்கின்றன. எனவே, கூலி உயர்வுதான் வேலை வாய்ப்பை பாதிக்கும் என்ற வாதமும் தவறானது.
1930-களின் பொருளாதார பெருமந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் முதன்முதலாக குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு $0.25 ஆக வரையறுக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் இன்றைய மதிப்பு $4.13. படிப்படியாக உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் 1968-ல் உச்சபட்ச மதிப்பான $1.60 (இன்றைய மதிப்பு $10.72)-ஐ எட்டியது. அதன் பிறகு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து இன்று $7.25 ஆக உள்ளது. அதாவது 1968-ஐ விட இப்போது 32% குறைவாக உள்ளது.
வாஷிங்டன் மாநிலத்தில் தற்போதைய குறைந்த பட்ச கூலி பெறும் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கும் $19,385 டாலர் ஆண்டு வருமானத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருப்பது கூட சாத்தியமில்லை. சியாட்டிலில் வாடகைக்கு வீடு எடுக்கவும் பிற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் போதுமான ஆண்டு வருமானம் $31,000-ஐ பெறுவதற்காக மணிக்கு $15 குறைந்த பட்ச கூலி கேட்டு தொழிலாளர்கள் போராடுகின்றனர்.
“நியாயமான கூலி கொடுக்காமல் மோசடி செய்யும் மெக்டொனால்ட்சை புறக்கணிப்போம்” என்ற முழக்கத்தோடு, “பாய்காட் மெக்பாவர்ட்டி” (மெக்வறுமையை புறக்கணிப்போம்) என்ற பெயரில் சியாட்டில் நகரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடைகளுக்கு முன்பு பிப்ரவரி 20-ம் தேதி மறியல்கள் நடைபெற்றன.
அந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டானி பெல்ப்ஸ் என்ற ஊழியர், “மணிக்கு $9.32 ஊதியத்தில் ஒரு குழந்தையை வளர்க்கும் அனுபவம் எப்படியானது என்று தெரியுமா? அது மிக மிகக் கொடுமையானது. நான் வேலைக்குப் போகும் போது குழந்தையை பராமரிக்கும் சேவை, குடியிருப்பதற்கு வீடு, மருத்துவ வசதி என எதுவும் கட்டுப்படி ஆவதில்லை. மாறாக 2 படுக்கையறை, 1 குளியலறை கொண்ட வீட்டை 7 பேருடன் பகிர்ந்து கொண்டு என் குழந்தையுடன் நான் வசிக்கிறேன். வாழ்வின் குறைந்த பட்ச தேவைகளை பெறுவதற்காக நான் $15 குறைந்தபட்ச ஊதியம் கோரி போராடுகிறேன்.” என்றார்.
மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் விற்பனையை அதிகரிப்பதற்கான உத்தியாக வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பர்கர் அல்லது வறுவலை கேட்ட அளவை விட அதிகரிக்கட்டுமா (super size your order) என்று ஊழியர்களை கேட்க வைக்கும் வழக்கத்தை பின்பற்றி “என் ஊதியத்தை உடனே பெரியதாக்கு ((super size my salary now)” என்ற முழக்கம் தெருவை நிறைத்தது. அடுத்தக் கட்ட போராட்டமாக மார்ச் 7 முதல் 15 வரையிலான வாரத்தை நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தும் “நடவடிக்கை வாரமாக” கடைப்பிடிக்கப் போவதாக தொழிலாளர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்த மறியல் போராட்டங்களால் கதி கலங்கிய உள்ளூர் மெக்டொனால்ட்ஸ் உணவக முதலாளிகள், ‘ஊதிய உயர்வு கொடுப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை’ என்று அறிவித்திருக்கின்றனர். இந்தப் போராட்டங்களின் தாக்கம் வாஷிங்டன் மாநிலம் முழுவதும் எதிரொலித்துள்ளது. மாநில ஆளுனர் குறைந்த பட்ச கூலியை மணிக்கு $13 ஆக அதிகரிப்பதை ஆதரிப்பதாக கூறியிருக்கிறார்.
போராட்டங்களின் மூலம்தான் தொழிலாளர் வர்க்கம் தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது அமெரிக்க தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டம் நமக்கு உணர்த்தும் உண்மை.
Sunday, February 16, 2014
மோசடியே தொழிலாகிப் போனது மோடி கூட்டத்தாருக்கு
கவலையே இல்லாமல் தொடர்ந்து ஏதாவது மோசடி
செய்வதே மோடி கூட்டத்தாரின் பிழைப்பாகி விட்டது.
அம்பலப்பட்டு அசிங்கப்பட்டாலும் அதையெல்லாம்
பொருட்படுத்தாமல் எருமை மாட்டுத் தோலோடு
மீண்டும் மீண்டும் செப்பிடு வித்தைகள் காண்பிப்பார்கள்
என்பதற்கு கீழே உள்ள படம்தான் உதாரணம்.
இன்னொன்றும் இதில் அடங்கி உள்ளது. ஓபாமா
படத்தை போடுவதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மீது மோடிக்கு உள்ள காதலும் வெளிப்படுகிறது.
தேர்தல் வர வர இன்னும் எத்தனை ப்ராட் படமெல்லாம்
வரப் போகிறதோ?
நன்றி : ராமன்
கடன் கட்ட துப்பில்லை, பதினைந்து கோடி ரூபாய்க்கு யுவராஜை ஏலம் எடுப்பாராம்.
கிங் பிஷர்
விமானக் கம்பெனி துவக்க கடன் வாங்கிய வகையில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை
இருநூற்றி ஐம்பது கோடிகளுக்கு மேல் பாக்கி.
விமானங்களை
நிறுத்தி வைத்ததற்கு வாடகைக் கட்டணமாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்கு
செலுத்த வேண்டிய பாக்கி பல கோடிகள்.
விமானங்களை
இயக்க எரிபொருள் வழங்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏராளமான கோடி ரூபாய் பாக்கி.
வேலை
பார்த்தும் பல மாத ஊதியத்தை வாங்காமல் ஏமாந்து நிற்கும் விமானிகள், ஏர்-ஹோஸ்டஸ்,
இதர ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியமும் கோடிகளில்தான்.
இதெல்லாம்
சாராய மன்னன் விஜய் மல்லய்யா செலுத்த வேண்டிய கடன் தொகை விவரங்கள். ஆனால் இத்தனை
பாக்கியையும் அடைப்பது பற்றி கவலையே இல்லாமல்
கர்னாடாகாவில்
உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு எண்பது லட்சத்தில் தங்கக் கதவு செய்து
போடுகிறார்.
திருப்பதி
வெங்கடாசலபதிக்கு மூன்று கோடி ரூபாயில்
வைரக் கிரீடம் போடுகிறார்.
சபரிமலை
ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படிகளையும் தங்கத்தால் அலங்கரிக்கிறார்.
இதோ நேற்று
தனது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக யுவராஜ்சிங்கை பதினைந்து கோடிக்கு ஏலத்தில்
எடுத்திருக்கிறார்.
ஒரு
புறம்
ஊதாரிச் செலவு. இன்னொரு புறம் பாக்கித் தொகையை செலுத்துவது பற்றி கவலையே பட
மாட்டார். இவரிடம் கடனை திருப்பி கட்டு என்று சொல்லக் கூட
ப.சிதம்பரத்திற்கு
தைரியம் கிடையாது. வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்பதால் பொங்கி எழும்
வீராதி வீரர்கள் இந்த அராஜகம் பற்றியெல்லாம் வாய் திறக்கவே மாட்டார்கள்.
ஒரு லட்சம்,
இரண்டு லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தர முடியாத விவசாயிகள் தற்கொலை செய்வதையும்
நாம் பார்க்கிறோம். அவர்கள் மானஸ்தர்கள். விஜய் மல்லய்யா???????????????????????
நன்றி : ராமன்.
மிஸ்டர் கேஜ்ரிவால், ஊழலின் ஊற்றுக்கண் எது என்பது இப்போதாவது புரிந்ததா?
எதிர்பார்த்தது போலவே அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆட்சி அல்பாயுசாகவே
முடிந்துள்ளது. அம்பானியை பாதுகாக்க காங்கிரசும் பாஜகவும் கரம்
கோர்த்துக் கொண்டுள்ளார்கள் என்று குற்றம் சாட்டி பதவி விலகினார்.
யாருக்கு எதிராக, யாருடைய ஊழல்களுக்கு எதிராக தேர்தலில்
பிரச்சாரம் செய்தாரோ, அவர்களுடைய ஆதரவோடு ஆட்சி அமைத்த
அந்த நிமிடத்திலிருந்தே அந்த நாற்காலி ஆடிக் கொண்டுத்தான்
இருந்தது.
அன்னா ஹசாரேவும் சரி, அவரது சீடராய் வந்து அவரை மிஞ்சிய
அரவிந்த் கேஜ்ரிவாலும் சரி ஊழல் என்று சொல்வது அரசியல்வாதிகள்
மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரைத்தான். ஊழல்
எனும் நாணயத்தின் மறு பக்கம் பற்றி அவர்கள் கவலைப்பட்டதே
கிடையாது.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல்வேறு ஊழல் வழக்குகள்
வந்துள்ளது. ஆனால் லஞ்சம் வாங்கிய அதிகாரியையோ அல்லது
அமைச்சரையோ குறை சொல்லும் யாரும் லஞ்சம் கொடுத்த
அந்த பெரிய மனிதர்களைப் பற்றி வாய் திறந்ததே இல்லை.
லஞ்சம் யார் வாங்கினாலும் தவறு, அனைவரும் சட்டத்தின்படி
தண்டிக்கப்பட வேண்டும். நூறு ரூபாய் லஞ்சம் வாங்கும் சாதாரண
ஊழியர்கள் மீது சாட்டையை வீசும் இந்த சமூகம் கோடிகளில்
லஞ்சம் வாங்கும் மனிதர்களுக்கு வெண்சாமரம் வீசும் அவலமும்
இந்த தேசத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
கோடிகளில் ஊழல் செய்த அதிகாரிகள், அமைச்சர்களாவது
பொது வெளியில் அம்பலப்படுகிறார்கள், சில சமயம்
திஹாருக்கும் செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு லஞ்சம்
அளித்த அந்த ஊழலுக்கு அடிப்படையாக இருந்த பெரிய
முதலாளிகள், பெரும் நிறுவனங்கள் பெயர் வெளியே வருவதே
இல்லை.
இன்னொரு முக்கியமான விஷயம் ஊழலில் ஏற்பட்டுள்ள
பரிணாம வளர்ச்சி.
சில பல கோடிகளில் இருந்த ஊழல் தொகை இன்று பல
ஆயிரம், லட்சம் கோடிகளில் உயரத் தொடங்கியது உலகமயமாக்கல்
கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பிறகே. எல்லை கடந்த
பேராசைக்கு நெறிமுறைகள் இரையாகி விட்டது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறிக்கு தீனி போடும்
அரசுகள், அதற்கு ஏற்றார்போல கொள்கைகளை வகுத்தும்
உதவுகிறார்கள், சலுகைகளும் வழங்குகிறார்கள், வசூலிக்க வேண்டிய
தொகைகளையும் வசூலிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதைத்தவிர
ஊழல் ஆறுகள் எப்போதுமே ஜீவநதியாக ஓடிக் கொண்டே
இருக்கின்றன.
ஆனால் அன்னா ஹசாராவேவும் கேஜ்ரிவாலும் இந்த கார்ப்பரேட்
கொள்கைகளைப் பற்றி இதுநாள் வரை வாய் திறந்ததே இல்லை.
முதல் முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் அம்பானிக்காக
காங்கிரசும் பாஜகவும் கரம் கோர்த்துக் கொண்டுள்ளார்கள்
என்ற உண்மையை, நாங்கள் பல்லாண்டுகளாக சொல்லிக் கொண்டே
இருக்கிற அந்த யதார்த்ததை சொல்லியுள்ளார்.
கார்ப்பரேட்டுகள் மட்டும் காரணமல்ல, உலக மயக் கொள்கைகள்தான்
ஊழலின் ஊற்றுக்கண் என்பதை இப்போதாவது புரிந்து
கொண்டீர்களா? மிஸ்டர் அரவிந்த் கேஜ்ரிவால்?
நன்றி : ராமன்.
Sunday, February 2, 2014
ALL INDIA INSURANCE EMPLOYEES' ASSOCIATION
23rd GENERAL CONFERENCE
AT A GLANCE
A WELL ORGANISED
CONFERENCE
The
Nagpur LICEU and the WZIEA made all efforts for the successful conduct of the
conference. Nearly 400 volunteers worked tirelessly for months to make the
necessary arrangements and take care of the logistics of such a massive
conference. The determination and commitment was seen on the face of every
volunteer. These comrades earned the much deserved appreciation and gratitude
of the delegates and the observers. The cultural troupe came up with some
wonderful and revolutionary songs each day of the conference. On 22nd January a program was
organized to show the rich culture of Maharashtra. On 23rd January the
program “100 years of Hindi Cinema” enthralled the audience. The AIIEA
congratulates and thanks the NDLICEU, WZIEA and the volunteers for the
wonderful work done.
The
23rd General Conference concluded on 24th January 2014 with
delegates and observers joining the singing troupe to confidently say ‘Hum
Honge Kamyab’. It was a very successful conference- be it the level of
participation, debate or the sheer organization. The 23rd Conference witnessed
tremendous enthusiasm to strengthen the organization to help it meet the
challenges of the times. It was this confidence that made the 23rd
Conference gave a call to ‘challenge the challenges’. Long Live the 23rd
General Conference! Long Live AIIEA!
GLIMPSES OF SUCCESSFUL 23RD CONFERENCE OF AIIEA
New General secretary Com V Ramesh- flanked by Com Amanullakhan and K Venugopal |
Com Chandrasekar Bose - Founder President of AIIEA addressing the session |
Delegates session- Indepth discussions |
Com Sitaram Yechuri M.P- Inagural address |
PROUD MOMENT FOR SZIEF- Com M Girija elected as Joint secretary of AIIEA- First woman officebearer of AIIEA |
Wednesday, January 15, 2014
தேசம் நாசமாக கரம் கோர்த்தவர்கள்
- சு.பொ.அகத்தியலிங்கம்
- சு.பொ.அகத்தியலிங்கம்
காங்கிரஸ் ஒழிந்து போகவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. தாங்க முடியாத விலையேற்றமும் வாழ்க்கைத் துயரங்களும்தான் மக்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது .அதே போல “ மோடி வந்து விடுவாரா ?” எனப் பயங்கலந்து கேட்காத இடம் குறைவு. மக்கள் மத நம்பிக்கை உள்ளவராகவே உள்ளனர் ஆயினும் யாரும் மதச் சண்டையை, கலவரத்தை விரும்பவில்லை. மதச் சார்பின்மை பற்றிய தெளிவு மக்களிடம் குறைவாக இருக்கலாம்.
ஆனாலும் மதமோதலை வெறுக்கின்றனர். வளர்ச்சி பற்றி மோடி பேசுவதும் குஜராத் மாடலென அவரது ஊது குழல்கள் தமுக்கடிப்பதும் ஒரளவு அரசியல் விழிப்புணர்வும் ஊடக பரிச்சயமும் உள்ள ஒரு பகுதியினர் மட்டுமே அறிந்த செய்தி. அவற்றின் பொய்மை அம்பலப்பட்டிருப்பினும் அதை கார்ப்பரேட் ஊடகங்கள் பூசி மெழுகுவதால் இன்னும் போதுமான அளவுப் போய்ச்சேரவில்லை. அதேசமயம் மோடி மீது மக்களுக்கு ஒருவித அச்சமும் பீதியும் உள்ளது. காங்கிரஸ், பாஜக இரண்டில் எது பொருளாதாரச் சீரழிவிற்குக் காரணம்.
நிச்சயமாக முதல் குற்றவாளி காங்கிரஸ். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நடந்த நாடகக் காட்சிகளை மனதில் கொஞ்சம் ஓடவிட்டுப் பாருங்கள். பட்ஜெட் கூட்டத்தொடர். மழைக்கால கூட்டத்தொடர், குளிர்காலக் கூட்டத்தொடர் என ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போதும் நடந்தது என்ன? அவையில் கூச்சல் குழப்பம், அவை ஒத்திவைப்பு, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பிரதான எதிர்க்கட்சி முடங்கியது.
ஆயினும் கடைசி நாள் பலமுக்கிய மசோதாக்கள் சத்தமின்றி நிறைவேற பாஜக முழு ஒத்துழைப்பு. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வை நாசப்படுத்தியுள்ள அனைத்து மசோதாக்களையும் கொண்டு வந்தது காங்கிரஸ் , விவாதமே செய்யவிடாமல் சபையை முடக்கிவிட்டு மசோதாக்கள் நிறைவேறத் தோள் கொடுத்தது பாஜக. பெருமுதலாளிகள் அந்நிய முதலைகள் தேசத்தை சூறையாடுவதில் இருவருக்கும் மாற்றுக் கருத்து ஒருபோதும் இருந்ததில்லை.
ஆனால் தேவையற்ற கூச்சலைக் கிளப்பி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு தேசமும் மக்கள் வாழ்வும் நாசமாக இரகசியமாக கரம் கோர்த்து செயல்பட்டவர்கள்தாம் இருவரும். ஆனால் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராடியவர்கள். போராடிக்கொண்டே இருப்பவர்கள் இடதுசாரிகளே !நேற்றும் இன்றும் அதுவே உண்மை.பாஜகவிடம் மோடியிடம் மாற்றுக்கொள்கை எதுவும் கிடையாது என்பதுடன் மக்களை மோதவிடும் மதவெறியும் சமூகநீதிக்கு எதிரான கோரப்பற்களும் இந்துத்துவம் என்கிற விஷக் கொடுக்கும் கூடுதலாக உண்டு .
மக்கள் இந்த கோரப்பற்களை,விஷக் கொடுக்கை வெறுப்பவர்களே. ஆனால் தண்ணீரில் தத்தளிப்பவன் கரையேற தெப்பம் தேடுவான் என்பதை அறிந்து வாய்மூடி அருகே வருகிறது முதலை; நம்பி ஏறினால் முதலைக்கு - மதவெறிக்கு தேசம் இரையாகிவிடும் . ஆம். வெள்ளத்தின் சுழலில் இருந்தும் முதலையின் வஞ்சகத்திலிருந்தும் ஒரே நேரத்தில் தேசமும் மக்களும் காப்பாற்றப்பட வேண்டும். சிக்கலானதுதான். கடுமையானதுதான்.
ஆயினும் முயன்றால் முடியும் . தில்லியில் சரியோ தப்போ வேறு தெப்பத்தை மக்கள் கண்டு தொற்றிக்கொண்டனர் . இந்தியா நெடுக மாற்றுதெப்பத்தை மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கு உள்ள சூழலுக்கு ஏற்ப வாய்ப்புள்ள அனைத்தையும் பயன் படுத்த மக்கள் தயாராகிவிட்டனர் . அந்த ஆர்வமும் தேடலும் கோபமும் எங்கும் முணுமுணுப்பாக அல்ல உரத்த சப்தமாக கேட்கத் துவங்கிவிட்டது ; இது மேலும் மேலும் வலுக்கும் ; ஆயின் தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா ;
எனவே, இதுவே இடதுசாரி சக்திகளும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் வீதியில் வீறுடன் செயல்படும் தருணம்.
நன்றி : தீகத்திர்
Monday, January 13, 2014
பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !
இந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில்
துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25
சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம்
தெரிவித்திருக்கிறது. 2005-2012 கால கட்டத்தில் விவசாயத் துறைக்கு வெளியில்
5.2 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 2013-2019 கால
கட்டத்தில் 3.8 கோடி புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாகும் என்று
கிரைசில் மதிப்பிட்டிருக்கிறது.
இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் வேலை செய்யும் வயதிலான மக்கள் தொகை 8.5 கோடி அதிகரித்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களில் 5.1 கோடி பேர் தொழில், சேவை துறைகளில் வேலை தேடுவார்கள். ஆனால், 3.8 கோடி பேருக்குத்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும். எஞ்சியவர்கள் விவசாயத்துறைக்கு திரும்புவதன் மூலம், விவசாயத் துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 1.2 கோடி அதிகரிக்கும்.
இப்போதே 49% மக்கள் ஈடுபட்டுள்ள விவசாயத் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% மதிப்பு மட்டுமே சேர்கிறது. பன்னாட்டு ஏகபோகம், மானியவெட்டு என்று கொல்லப்பட்டு வரும் விவசாயம் அழிக்கப்படுவதினாலேயே மக்கள் வேலை தேடி நகர்ப்புறங்களை நாடுகின்றனர். மேலே சொன்னபடி, இவ்வாறு விவசாயத்திலிருந்து வெளியேறும் உழைக்கும் மக்கள் அனைவரையும் உள் வாங்குவதாக தொழில்/சேவைத் துறைகள் இல்லை. வேலையற்றோரை தாங்குமளவு விவசாயமும் வளமாக இல்லை. இறுதியில் வேலையற்றோர் விகிதம் வேகமாக வளர்கிறது.
கிரிசிலின் ஆய்வுப்படி சமீப ஆண்டுகளில் தகவல்/தகவல் தொழில் நுட்பத் துறை, வணிக மற்றும் நிதித் துறை சேவைகள் போன்ற ஆள் தேவை குறைவான துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதால் வேலைவாய்ப்பு இல்லாத பொருளாதார வளர்ச்சி நிலை உருவாகியுள்ளது. இந்த துறைகளில் ரூ 10 லட்சம் மதிப்பு கூடுதல் ஏற்படுத்துவதற்கு கூடுதலாகஓரிரு ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால், இந்தத் துறைகளில் ஏற்படும் அதிக வளர்ச்சி போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. உதாரணமாக, 2012-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19%-ஐ ஈட்டிய சேவைத் துறையில் மொத்த உழைக்கும் மக்களில் 3% மட்டுமே வேலை செய்தனர்.
இரண்டாவதாக, உற்பத்தித் துறையில் இயந்திர மயமாக்கலின் காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்குக் காரணமாக தொழில் நுட்ப முன்னேற்றத்தையும், தொழிலாளர் நலச் சட்டங்களையும் கிரிசில் சுட்டியுள்ளது.
அதாவது, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம், பாதுகாப்பான பணிச்சூழல், 8 மணி நேர வேலை போன்ற விதி முறைகளின் காரணமாக முதலாளிகள் தொழிலாளர்களை நீக்கி விட்டு இயந்திரங்கள் அதிகமாக ஈடுபடுத்துகின்றனர். இதனால் வேலை வாய்ப்பு குறைகிறது. எனவே, இந்த சட்ட திட்டங்களை அகற்றி விட்டு, சுதந்திரமான தொழிலாளர் சந்தையை உருவாக்கினால், அடிமைகளாக வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு வந்து குவியும் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது நடத்தும் சுரண்டலுக்கு இணையாக அனைத்து தொழிலாளர்களையும் சட்டபூர்வமாக நடத்துவதுதான் முதலாளிகளின் கோரிக்கை. கிரிசிலின் ஆய்வும் இந்த நோக்கத்தைத்தான் கொண்டிருக்கிறது.
2005 வரையிலான 7 ஆண்டுகளில் (1998-2005) தொழில் துறையில் 1% மதிப்புக் கூடுதலுக்கு வேலை வாய்ப்பு 0.68% அதிகரித்தது. 2005-2012 இடையிலான ஏழு ஆண்டு காலத்தில் தொழில் துறையில் 1% மதிப்புக் கூடுதலுக்கு வேலை வாய்ப்பு 0.17 மட்டுமே அதிகரித்தது. அதாவது, தொழில் துறையின் விற்பனை மதிப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் அதில் உருவாகும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை சிறிதளவே அதிகரித்தது.
பொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவின் வறுமையை ஒழித்துக் கட்டும் மந்திரக் கோல் என்று மன்மோகன் சிங் தலைமையிலான உலகமயக் கொள்கையின் ஆதரவாளர்கள் சாதிக்கின்றனர். இந்தியாவின் விவசாயப் பெருமக்கள் அனைவருக்கும் சேவைத் துறையிலும், தொழில் துறையிலும் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி, நாட்டில் வறுமையை ஒழிக்கப் போவதாகச் சொல்லும் இந்த மோசடி பொருளாதாரக் கொள்கையின் யோக்கியதை இப்படி பல்லிளிக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் நாட்டின் ‘வளர்ச்சி’க்காக முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி விடும் அதே நேரத்தில், மக்களுக்கு விவசாயத்தில் வேலை பார்த்தால் பட்டினி, தொழில் துறையில் வேலை வேண்டுமென்றால் உரிமைகளை அனைத்தும் விட்டுக் கொடுத்து அடிமைகளாக பணி புரியும்படி முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகள், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாத சேவைத் துறை என்பதுதான் இந்த பொருளாதாரக் கொள்கையின் பலனாக உள்ளது.
கோடிக் கணக்கான மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக திரிய விட்டிருப்பதுதான் 20 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார் மய, தாராள மய, உலக மய கொள்கைகளின் விளைவு. அவற்றை இன்னும் தீவிரப்படுத்தினால்தான், அதாவது மக்களை இன்னும் பராரிகளாக மாற்றினால்தான் நாங்கள் தொழில் முனைவு காட்டி வளர்ச்சிக்கு வழி வகுப்போம் என்று முதலாளிகள் பிடிவாதம் பிடிக்கின்றனர்.
இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் வேலை செய்யும் வயதிலான மக்கள் தொகை 8.5 கோடி அதிகரித்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களில் 5.1 கோடி பேர் தொழில், சேவை துறைகளில் வேலை தேடுவார்கள். ஆனால், 3.8 கோடி பேருக்குத்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும். எஞ்சியவர்கள் விவசாயத்துறைக்கு திரும்புவதன் மூலம், விவசாயத் துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 1.2 கோடி அதிகரிக்கும்.
இப்போதே 49% மக்கள் ஈடுபட்டுள்ள விவசாயத் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% மதிப்பு மட்டுமே சேர்கிறது. பன்னாட்டு ஏகபோகம், மானியவெட்டு என்று கொல்லப்பட்டு வரும் விவசாயம் அழிக்கப்படுவதினாலேயே மக்கள் வேலை தேடி நகர்ப்புறங்களை நாடுகின்றனர். மேலே சொன்னபடி, இவ்வாறு விவசாயத்திலிருந்து வெளியேறும் உழைக்கும் மக்கள் அனைவரையும் உள் வாங்குவதாக தொழில்/சேவைத் துறைகள் இல்லை. வேலையற்றோரை தாங்குமளவு விவசாயமும் வளமாக இல்லை. இறுதியில் வேலையற்றோர் விகிதம் வேகமாக வளர்கிறது.
கிரிசிலின் ஆய்வுப்படி சமீப ஆண்டுகளில் தகவல்/தகவல் தொழில் நுட்பத் துறை, வணிக மற்றும் நிதித் துறை சேவைகள் போன்ற ஆள் தேவை குறைவான துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதால் வேலைவாய்ப்பு இல்லாத பொருளாதார வளர்ச்சி நிலை உருவாகியுள்ளது. இந்த துறைகளில் ரூ 10 லட்சம் மதிப்பு கூடுதல் ஏற்படுத்துவதற்கு கூடுதலாகஓரிரு ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால், இந்தத் துறைகளில் ஏற்படும் அதிக வளர்ச்சி போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. உதாரணமாக, 2012-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19%-ஐ ஈட்டிய சேவைத் துறையில் மொத்த உழைக்கும் மக்களில் 3% மட்டுமே வேலை செய்தனர்.
இரண்டாவதாக, உற்பத்தித் துறையில் இயந்திர மயமாக்கலின் காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்குக் காரணமாக தொழில் நுட்ப முன்னேற்றத்தையும், தொழிலாளர் நலச் சட்டங்களையும் கிரிசில் சுட்டியுள்ளது.
அதாவது, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம், பாதுகாப்பான பணிச்சூழல், 8 மணி நேர வேலை போன்ற விதி முறைகளின் காரணமாக முதலாளிகள் தொழிலாளர்களை நீக்கி விட்டு இயந்திரங்கள் அதிகமாக ஈடுபடுத்துகின்றனர். இதனால் வேலை வாய்ப்பு குறைகிறது. எனவே, இந்த சட்ட திட்டங்களை அகற்றி விட்டு, சுதந்திரமான தொழிலாளர் சந்தையை உருவாக்கினால், அடிமைகளாக வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு வந்து குவியும் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது நடத்தும் சுரண்டலுக்கு இணையாக அனைத்து தொழிலாளர்களையும் சட்டபூர்வமாக நடத்துவதுதான் முதலாளிகளின் கோரிக்கை. கிரிசிலின் ஆய்வும் இந்த நோக்கத்தைத்தான் கொண்டிருக்கிறது.
2005 வரையிலான 7 ஆண்டுகளில் (1998-2005) தொழில் துறையில் 1% மதிப்புக் கூடுதலுக்கு வேலை வாய்ப்பு 0.68% அதிகரித்தது. 2005-2012 இடையிலான ஏழு ஆண்டு காலத்தில் தொழில் துறையில் 1% மதிப்புக் கூடுதலுக்கு வேலை வாய்ப்பு 0.17 மட்டுமே அதிகரித்தது. அதாவது, தொழில் துறையின் விற்பனை மதிப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் அதில் உருவாகும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை சிறிதளவே அதிகரித்தது.
பொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவின் வறுமையை ஒழித்துக் கட்டும் மந்திரக் கோல் என்று மன்மோகன் சிங் தலைமையிலான உலகமயக் கொள்கையின் ஆதரவாளர்கள் சாதிக்கின்றனர். இந்தியாவின் விவசாயப் பெருமக்கள் அனைவருக்கும் சேவைத் துறையிலும், தொழில் துறையிலும் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி, நாட்டில் வறுமையை ஒழிக்கப் போவதாகச் சொல்லும் இந்த மோசடி பொருளாதாரக் கொள்கையின் யோக்கியதை இப்படி பல்லிளிக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் நாட்டின் ‘வளர்ச்சி’க்காக முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி விடும் அதே நேரத்தில், மக்களுக்கு விவசாயத்தில் வேலை பார்த்தால் பட்டினி, தொழில் துறையில் வேலை வேண்டுமென்றால் உரிமைகளை அனைத்தும் விட்டுக் கொடுத்து அடிமைகளாக பணி புரியும்படி முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகள், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாத சேவைத் துறை என்பதுதான் இந்த பொருளாதாரக் கொள்கையின் பலனாக உள்ளது.
கோடிக் கணக்கான மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக திரிய விட்டிருப்பதுதான் 20 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார் மய, தாராள மய, உலக மய கொள்கைகளின் விளைவு. அவற்றை இன்னும் தீவிரப்படுத்தினால்தான், அதாவது மக்களை இன்னும் பராரிகளாக மாற்றினால்தான் நாங்கள் தொழில் முனைவு காட்டி வளர்ச்சிக்கு வழி வகுப்போம் என்று முதலாளிகள் பிடிவாதம் பிடிக்கின்றனர்.
நன்றி: வினவு.காம்
எரியும் சமையல் எரிவாயு பிரச்சனை – தேவையான அணுகுமுறை (3)
புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்கை
ஜனநாயகம் என்பதற்கு ‘’மக்களின், மக்களால், மக்களுக்காக’’
(of the People, by the People, for the people) என்ற ஒரு
விளக்கமிருக்கிறது. இதே போன்ற விளக்கத்தை NELP-க்கு கொடுக்கச் சொன்னால் அது
“ரிலயன்ஸின், ரிலயன்ஸால், ரிலயன்ஸுக்காக“ என்பதைத் தவிற
வேறெதுவாகவும் இருக்க முடியாது. இக்கொள்கை செயல்படுத்தத் துவங்கி ரிலயன்ஸ்
ஊழல் நாட்டின் தலைமை தணிக்கை அதிகாரியால் வெளிக் கொணரப்பட்டு அது
நீர்த்துப் போய்விட்டது. ரிலயன்ஸ் நிறுவனம் இந்திய மக்களின் பொது சொத்தான
ஆழ்கடல் எண்ணெய்/எரிவாயுக் கிணறுகளிலிருந்து கொணரும் எரிவாயுவிற்கு
நிர்ணயிக்கப்படும் விலையானது அதன் கொள்ளை லாபத்தை உறுதிப்படுத்துகிறது.
சற்று விபரமாக பார்ப்போம்
1998ம் ஆண்டின் புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்கையின் கூறுகள்
- அன்னிய நிறுவனங்கள் 100% உடமை கொள்ளலாம்
- நிறுவனங்கள் எண்ணெய்/எரிவாயுவை உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ விற்கலாம்
- தேசிய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டு அவசியமில்லை
- உற்பத்தி ஆரம்பமான பின் 7 ஆண்டுகளுக்கு வரி விடுமுறை
- இறக்குமதி செய்யும் பொருளுக்கு சுங்கவரி கிடையாது
- உற்பத்தியை பகிர்ந்து கொள்ளும் சிறப்பு உடன்பாடு
நமது நாட்டின் எண்ணெய்-எரிவாயு
படிமானத்தை வகைப்படுத்தியதில் மேலே உள்ள வரைபடம் வருகிறது. இது 3.14
மில்லியன் ச.கிமீ பரப்பளவு கொண்டது
இந்த படிமான வரைபடத்தைத்தான் துண்டு
போட்டு ஒவ்வொரு சுற்றுக்களிலும் குறிப்பிட்ட அளவு துண்டுகளை வட்டங்கள்
(Blocks) என்றழைக்கப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகின்றன. இதுவரை பத்து
சுற்றுகள் முடிந்துவிட்டன ஓன்பது சுற்றுக்க்ளின் விபரம் வரைபடத்தில்
உள்ளது.
- 9 சுற்று NELP முடிந்துள்ளது.
- 254 வட்டங்கள் கையளிக்கப் பட்டுள்ளன
- 1.234 மில்லியன் ச.கிமீ பரப்பு இதில் அடங்கும்
- ஜனவரியில் 10 வது சுற்று
- 10வது சுற்றில் 68 வட்டங்கள் திறக்கப்பட இருக்கிறது
- நிலம், ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகள் அடங்கும்
- தனியார் நிறுவனங்கள் முன்னணி
- அரசு நிறுவனமான ONGC இன்னும் களத்தில் இருக்கின்றது
- கண்டுபிடிப்புகளில் பாதிக்கு மேல் ரிலயன்ஸ் நிறுவனம் கையில்
இதுவரை நடந்த தேடல்களில் நடந்த கண்டுபிடிப்புகள்
நிறுவனங்கள்
|
கண்டுபிடிப்புகள்
|
நிறுவன வகை
|
British Gas Explo. & Prod.India Ltd. |
2
|
வெளிநாட்டு நிறுவனம் |
Cairn Energy India Pty.Ltd. |
28
|
வெளிநாட்டு நிறுவனம் |
Essar Oil Ltd. |
5
|
தனியார் நிறுவனம் |
Focus energy Ltd. |
2
|
தனியார் நிறுவனம் |
Gujarat State Petroleum Corporation Ltd. |
22
|
மாநில பொதுத்துறை |
Hardy Exploration & Production (India) Inc. |
1
|
வெளிநாட்டு நிறுவனம் |
Hindustan Oil Exploration Company Ltd. |
2
|
தனியார் நிறுவனம் |
INTERLINK |
1
|
தனியார் நிறுவனம் |
Jubilant Oil & Gas Pvt. Ltd. |
5
|
தனியார் நிறுவனம் |
NAFTOGAZ |
1
|
வெளிநாட்டு நிறுவனம் |
Niko Resource Ltd. |
2
|
வெளிநாட்டு நிறுவனம் |
Oil & Natural Gas Corp. Ltd. |
17
|
மத்திய பொதுத்துறை |
Reliance Industry Ltd. |
48
|
தனியார் நிறுவனம் |
இந்த நிலை தொடர்ந்தால் 2016-17ம் ஆண்டு
உற்பத்தியில் 63% ரிலயன்ஸ் நிறுவனம் கையில் போய்விடும் அரசு நிறுவனம் 30%
பிற தனியார் நிறுவனங்கள் 7% பங்கு வகிக்கும். அந்த நிலையில் எண்ணெய்
விற்பனை நிலையங்களும் உற்பத்தி நிலையங்களும் தனித்தனியாக இயங்கும் சூழ்நிலை
உருவாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் குறைவசூல் போன்றவைகள் இருக்க
முடியாது. விற்பனை நிலையங்கள் உற்பத்தி நிலையங்கள் கேட்கும் தொகைக்குதான்
கொள்முதல் செய்ய முடியும். புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்யில்,
கண்டுபிடிக்கப்படும் பெட்ரோலிய வளங்களை கண்டுபிடிக்கும் நிறுவனமே உற்பத்தி
செய்து கொள்ளலாம் என்றும் அவைகள் வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ விற்கலாம்
என்றிருப்பதால்தான் அவர்கள் வெளிநாட்டில் என்ன விலைகிடைக்.குமோ அதே
விலையைக் கொடுத்திட சமையல் எரிவாவுவின் விலை நிர்ணயத்தில் இறக்குமதி
ஒப்பீட்டு விலையையும் இதர பெட்ரோலியப் பொருட்களுக்கு ஏற்றுமதி ஒப்பீட்டு
விலையையும் நிர்ணயிக்க வேண்டும் என்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க இந்த தனியார்
நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் எந்த விகிதத்தில் அரசிடம் பகிர்ந்து
கொள்ளும் எப்படிப்பட்ட பகிர்தல் இருக்கும் என்பதும் கொஞ்சம் கவலையளிக்கும்
விஷயமாகும். கிடைக்கும் எண்ணெய்/எரிவாயு இரண்டாகப் பிரிக்கப்படும். முதல்
பகுதி செலவுப் பெட்ரோலியம் எனவும் இரண்டாம் பகுதி லாபப் பெட்ரோலியம் எனவும்
கூறப்படும். செலவுப் பெட்ரோலியம் என்பது கிடைக்கும் பெட்ரோலியத்தில்
கட்டமைப்பு மூலதனம், உற்பத்திச் செலவு, உரிமம் ஆகியவற்றிற்கான பங்கு. லாபப்
பெட்ரோலியம் என்பது மொத்தப் பெட்ரோலியத்திலிருந்து செலவுப்
பெட்ரோலியத்தைக் கழித்தால் கிடைப்பது. லாபப் பெட்ரோலியத்தில் அரசின் பங்கு
என்ன என்பதற்கு மற்றொரு சமன்பாடு உள்ளது. அதைப் புரிந்து கொள்வதற்கு முன்
இன்னும் சில கலைச் சொற்களை புரிந்து கொள்ள வேண்டும்.
முதலீட்டு விரிப்புவிகிதம் (Investment
Multiple Ratio) என்பது மறு திரட்டு செய்த கட்டமைப்பு செலவிற்கும்
கட்டமைப்புச் செலவிற்கும் உள்ள விகிதம் இதை IM என்று குறிப்பிட்டால். லாபப்
பெட்ரோலியத்தில் அரசின் பங்கு என்பது லாபப் பெட்ரோலியத்தையும் முதலீட்டு
விரிப்புவிகிதத்தையும் பெருக்கினால் கிடைப்பது.
கணித சமன்பாட்டு வடிவில் கொடுக்க வேணடுமென்றால்,
மொத்த பண வருவாய் (Net Cash Income) = ஒப்பந்தகாரரின் வருட வருவாய் – (உற்பத்திச் செலவு + ஆதாய உரிமத் தொகை(Royalty))
ஒப்பந்தகாரரின் வருட வருவாய் = பெட்ரோலியத்தின் விற்பனை வருவாய் + லாபப் பெட்ரோலியத்தில் ஒப்பந்தகாரரின் பங்கு
முதலீட்டு விரிப்புவிகிதம் = ஒப்பந்தகாரரின் வருட வருவாய் / ஒப்பந்தகாரரின் வருட முதலீடு
ஒப்பந்தகாரரின் வருட முதலீடு = அந்த ஆண்டுவரை திருப்பி எடுக்கப்படாத மீதமிருக்கும் முதலீடு
லாபப் பெட்ரோலியத்தில் அரசின் பங்கு = லாபப் பெட்ரோலியம் X முதலீட்டு விரிப்பு விகிதத்தினடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட படிமுறைவீதம்
முதலீட்டு விரிப்பு விகிதத்தில்
நிர்ணயிக்கப்பட்ட படிமுறைவீதம் (Slab Rate on the basis of Investment
Multiplier) என்பது ஒப்பந்தத்துக்கு ஒப்பந்தம் வேறுபடும்.
கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் விஷயம்
என்னவென்று பிடிபடும். உற்பத்தியின் ஆரம்ப கட்டத்தில் ஒப்பந்தகாரர்
திருப்பி எடுக்க வேண்டிய முதலீடு அதிகம் இருக்கும் எனவே முதலீட்டு
விரிப்புவிகிதம் குறைவாகவே இருக்கும் (பின்னத்தின் கீழ் எண் அதிகமாக
இருப்பதால்) ஆகவே அரசுக்கு கிடைக்கும் லாபமும் குறைவாகவே இருக்கும்.
தப்பித்தவறி அதிகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு படிமுறைவீதமும்
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோலியம் கண்டுபிடித்த பிறகு லாப
பங்கீடு ஒப்பந்தம் போடும் பொழுது இந்த படிமுறைவீதத்திலும் புகுந்து
விளையாடி அரசுக்கு ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம். இதுதான் ரிலயன்ஸ்
விஷயத்தில் நடந்தது. இதைத்தவிர ஆண்டுகள் செல்லச் செல்ல முதலீட்டு
விரிப்புவிகிதம் கூடினாலும், கிணறு வற்றி அதிலிருந்து பெட்ரோலியத்தை
எடுக்கும் செலவு அதிகமாவதால் அப்பொழுதும் அரசின் லாப பங்கு குறையும்.
ரிலயன்ஸ் விஷயத்தைப் பார்த்தால்,
முதலாவதாக ரிலயன்ஸுக்கு வளமான வாய்ப்புள்ள வட்டங்கள் கொடுக்கப்பட்டன.
இரண்டாவது அது அதீதமான தேடுதல் செலவைக் காட்டி செலவுப் பெட்ரோலியத்தை
கூட்டிக் காண்பித்து லாபப் பெட்ரோலியத்தை குறைத்தது. மூன்றாவது
படிமுறைவீதத்தையும் அவர்களுக்கு லாபம் தரும் வகையில்
நிர்ணயித்திருந்தார்கள். D-6 என்ற எண்ணெய் வயலில் கண்டுபிடிக்கப்பட்ட
பெட்ரோலியத்தை எடுத்து விற்பனை செய்ய ஆகும் கட்டமைப்புச் செலவு 2.4
பில்லியன் அமெரிக்க டாலர் என்று 2004ல் ஒப்பந்தம் கோரிவிட்டு 2006ல் அதை
8.8 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தியது. இது எல்லாவற்றுக்கும் மேலாக
கிணற்றங்கரை எரிவாயுவிற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையானது அரேபிய நாட்டில் ஒரு
கிணற்றிலிருந்து எரிவாயுவை விலைக்கு வாங்கி அதை கோதாவரி எண்ணெய்க்
கிணறுவரை கொண்டுவர என்ன செலவாகுமோ அதையே விலையாக நிர்ணயித்தார்கள். நமது
நாட்டின் வளம் நமது மக்களுக்கு விநியோகிப்பதற்கு எதற்கு சரக்கு மற்றும்
காப்பீட்டு கட்டணத்துடன் கூடிய இறக்குமதி ஒப்பீட்டு விலை? சர்வதேச
சந்தையில் விலை நிர்ணயம் என்பது வேண்டல்-வழங்கல் அடிப்படையில்
மாறிவருகிறது. இது எப்படி நமது நாட்டிற்கு பொருந்தும். நியாயமான முதலீட்டு
செலவுகளையும் இயக்கச் செலவையும் கணக்கிட்டு அதில் பதினைந்து சதம் லாபம்
வைத்து விலை நிர்ணயிப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது? இப்படியாக ரிலயன்ஸ்
நிறுவனத்தின் மூலதனம் பெருகுவதற்கு இந்திய மக்களின் பொதுவளமானது காவு
கொடுக்கப்பட்டது.
இறுதியாக
மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு
என்பது அடிப்படை வாழ்வு சாதனப் பொருளாகிவிட்டதால் அது மக்களுக்கு நியாயமான
விலையில் கிடைக்கச் செய்வதற்கு அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். இன்னும் 50
சதவீத மக்கள் விறகையே பயன்படுத்தி வரும் அவலத்தைப் போக்க அரசின்
திட்டங்கள் மும்முரப்படுத்த வேண்டும். எனினும் வாங்கும் சக்தி இல்லாத
மக்களிடம் முதுகெலும்பை முறிக்கும் விலையில் சமையல் எரிவாயுவை கொடுத்தால்
அரசின் இலக்கு எப்படி நிறைவேறும்? நடுத்தர மக்களுக்கு வாங்கும் சக்தி
இருக்கிறது என்பதால் அவர்களிடம் அவர்கள் வாங்கும் சமையல் எரிவாயுவின்
மதிப்பைவிட அதிக விலைக்கு விற்று வருவது மோசடியான நடவடிக்கையாகும்.
உலகமயமாக்கல் கட்டத்தில் கூட்டுபேர உரிமை நசுக்கப்பட்டுவிட்டதால்
பணவீக்கத்திற்கு தகுந்தாற்போன்ற ஊதிய உயர்வு இல்லாமல் உண்மை ஊதியம்
குறைந்து வரும் சூழலில் முதுகெலும்பை முறிக்கும் விலையை கொடுக்கச் செய்வது
இந்த அரசு ஒரு சேமநல அரசா என்ற கேள்வியை எழுப்புகிறது.
சமையல் எரிவாயு விஷயத்தில் இறக்குமதி
ஒப்பீட்டு விலை இயக்க முறையை உடனடியாக கைவிட வேண்டும். 78% உள்நாட்டு
உற்பத்தியில் 15%-20% வரை லாபம் வைத்து விலை நிர்ணயம் செய்து இறக்குமதி
உள்ளிட்ட மொத்தச் செலவின் சராசரியே விலையாக நிர்ணயிக்க வேண்டும். இந்த
விலையும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால் நுகர்வோரின் வருமானத்திற்கு
தகுந்தாற் போன்ற மானியத்தைக் கொடுக்கலாம். இறக்குமதி உள்நாட்டு உற்பத்தி,
விகிதம் அதிகமாக்காமல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். புதிய
வளங்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் இருக்கும் சுத்திகரிப்பாலைகளையும்
வாயுஉடைப்பாலைகளையும் (Gas Fractionators) சமையல் எரிவாயு உற்பத்தியை
அதிகரிக்கும் விதமாக இயக்க வேண்டும். புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்கையை
மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனடிப்படையில் போடப்படும் லாப பங்கீடு
ஒப்பந்தங்களும் ஒருதலைபட்சமாக இருப்பதை மாற்ற வேண்டும். புதிய தேடல்
மற்றும் உரிமக் கொள்கையின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட வளங்களில்
செய்யப்படும் உற்பத்திப் பொருளுக்கு இறக்குமதி ஒப்பீட்டு விலை நிர்ணயிப்பதை
ரத்து செய்ய வேண்டும். இந்திய எண்ணெய்./எரிவாயு கிணற்றங்கரை விலை என்பது
கிணற்றங்கரைக்கு பொருளை கொண்டுவருவதற்காக உண்மையிலேயே செய்யப்பட்ட செலவின்
அடிப்படையில் இருக்க வேண்டும். வேண்டல்-வழங்கல் கோட்பாடு செயல்படுவதை
அனுமதிக்கக் கூடாது. பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டு முன்னுரிமைக்
கொள்கை அறிவிக்கப்பட வேண்டும். அது கேந்திர வளமான எரிவாயுவை எரித்து
மின்சாரம் தயாரிப்பதை ஊக்கப்படுத்தக் கூடாது.
இந்திய மக்களை ஏழ்மை கல்லாமை, நோய்
நொடிகளிலிருந்து விடுதலை செய்ய பயன்பட வேண்டிய செல்வ வளங்கள் தனியாரிடம்
கொள்ளை போவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)