இலவச நில ஊழல்”: 6000 ஏக்கர் நிலங்களைச் சுருட்டிய ”ஏழைகள்” யார்?
மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில ஆரசுகளும் தொடர்ந்து ஊழல் புகார்களில் சிக்கி வருகின்றன. குறிப்பாக பாஜக கர்நாடகாவில் அரங்கேற்றிவரும் அரசியல் விளையாடல்கள் ஊடகங்களாலும், சாதாரண மக்களாலும் எள்ளி நகையாடப்பட்டன.
அதிமுகதான் ஊழல் கட்சி என்று குற்றம் சாட்டியே தன்னை ஆட்சியில் அமர்த்திக் கொண்ட திமுக-வோ, தற்போது தொடர்ந்து ஊழல் புகார்களுக்கு ஆளாகிவருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போலவே, தமிழகத்தில் நடைபெற்றுள்ள நில மோசடி ஊழல்கள் தற்போது கவனிக்கத்தக்கவையாக முன்னுக்கு வந்துள்ளன.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் சில ஆவணங்களுடன் கூடிய புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த ஆவணங்கள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன. ஒரே நிலம் தொடர்பான இரண்டு பத்திரங்கள் அவை.
அப்பகுதியில், 7/1996/584/2 எண் கொண்ட 23.95 ஏக்கர் நிலத்தை அரசு வாங்கி 918 இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கியுள்ளது. அதே பதிவு எண் 522/2000 கொண்ட அன்பு நகர் பகுதியும் அரசுக்கு சொந்தமானதாகும். அதேபோல, 586/2,3, 588/1,2,5 எண்கள் கொண்ட அம்பேத்கர் நகரிலும் அரசு வாங்கி 250 வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அந்த மோசடி ஆவண நகல்களும் மதுக்கரை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பக்காவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஸ்டீபன் என்பவர் மகன் எரிக்ஸ்டீபன் என்பவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள 584/4 (அவ்வை நகர்), 586/2,3,5 (அன்புநகர்) உள்ளிட்டு 180 ஏக்கர் நிலங்களை கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த முகமதுஅலி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். தனிநபர் கிரயம் பதிவு செய்தாலே சிட்டா, அடங்கல் நகல்கள் சரிபார்க்கப்படும் நிலையில், எவ்வித உண்மையான ஆவணங்களும் இன்றி இந்த நிலங்கள் கிரயம் செய்யப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல, இந்த பதிவுக்காக பெறப்பட்டுள்ள வில்லங்கச் சான்று, 1943 முதல் தற்போது வரையில் இந்த நிலங்கள் குறித்து எந்த பத்திரப் பதிவுகளும் இல்லை என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் பதிவுகள் உள்ளன. இப்படி, முரணான தகவல்களைக் கொண்டு பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயி பழனியப்ப கவுண்டர் கூறியதாவது : எனக்கு 31 ஏக்கர் நிலம் இப்பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் விவசாயத்திற்கான கிணறு வெட்ட இரண்டு முறை அரசு வங்கியில் கடன் பெற்றுள்ளேன். மேலும் அரசிற்கு மண்வள பாதுகாப்பு திட்டத்திற்கு எனது நிலத்தில் இருந்து 50 சென்ட் நிலத்தை தானமாக கொடுத்திருக்கிறேன். இதுவெல்லாம் பத்திரப்பதிவு துறையில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலங்களையெல்லாம் எனக்கே தெரியாமல் வெறோருவருக்கு விற்று இருக்கின்றனர். இதில் வெடிக்கை என்னவென்றான்றால் புரோக்கர்கள் கையில் இருக்கும் வில்லங்க சான்றிதழில் இந்த விபரங்கள் எதுவும் இல்லை. அப்படி என்றால் பதிவு துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இதுவெல்லாம் எப்படி சாத்தியம். நில மோசடிக்கு உடந்தையாக இருந்திருக்கும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.(நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை) (நன்றி: தீக்கதிர்)
ஒருவரின் நிலத்தை அவருக்குத் தெரியாமலே விற்கும் இந்த மோசடியின் தொடர்ச்சியாக, அரசு நிலத்தை, அரசு ஒப்புதலுடனே ஆக்கிரமிக்கும் மோசடியும் தமிழகம் முழுவதும் பரவலாக அரங்கேறிவருகிறது.
மலுமிச்சம்பட்டியில் அரசு இலவச நிலமாக அரியப்படும் இடத்தில் தனியார் கல்லூரி ஒன்று எழும்பிவருகிறது. |

இதன் தொடர்ச்சியாக, அதே பகுதியில், தமிழக அரசின் இலவச நில திட்டத்தில் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிலம் அமைந்துள்ளது. அங்கே, வேலி அமைக்கப்பட்டு தனியார் கல்லூரி (சர்வே எண்: 567/25 ஏபி முதல் 576/40, 738/2, மற்றும் 738/40 வரை) உருவாகிவருகிறது.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேவகவுண்டனூர் பகுதியில் மலைப்பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலத்தில், கனிம வளங்களை வெட்டியெசுக்கும் கல் குவார் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி திமுக பஞ்சாயத்து தலைவர் இந்த கல் குவாரியை நடத்திவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் (சர்வே எண்: 489/5 இலிருந்து 489/21).
பவானி வட்டம் அந்தியூர் “ஏ” கிராமப் பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலங்கள் (சர்வே எண் 82/6, 82/7, 82/8, 106/3, 117/3, 212/6, 229/2) அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனின் உறவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
திண்டுக்கல் மதுரை நெடுஞ்சாலையில் உள்ள நிலங்கள் (சர்வே எண்: 4/5, 4/9) ஊறுகாய் கம்பெனியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் திமுக செயலாளர் வைகை சேகர், கிரி அஇஅதிமுகவின் பிரமுகர் சன்னாசி ஆகியோர் வைகை அணையைச் சுற்றிய வளமான நிலங்கள் (சர்வே எண்: 1349/5, 1349/6, 1445/1 1445/2, 1446/1) வளமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் சூரியூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட இலவச நிலங்கள் (சர்வே எண்: 50/11 50/12 52/3 52/8 63/1 63/4 67/2 67/12 67/13 67/14 67/16 76/15) திமுக பொதுக்குழு உறுப்பினர் வசல்பட்டி விஜி கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்ளூர் காரர்கள் தெரிவிக்கின்றனர். (நன்றி: இந்தியா டுடே)
மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுள்ள மோசடியில் மிகச் சிறு பகுதியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் தரப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலத்தின் அளவுக்கும் (2,10,747), அதனால் பயனடைந்த விவசாயிகள் (1,75,798) குறித்து செய்திகளே வெளியாகாததையும் பார்க்கும்போது மோசடி சாதாரணமானதாகத் தெரியவில்லை. அத்துடன், ஒரு குடும்பத்திற்கான நில உச்சவரம்பு 15 ஏக்கர் மட்டுமே என்று குறைக்கப்பட்டும் அப்படி எந்த நிலமும் கைப்பற்றப்பட்ட செய்திகள் வெளியாகவில்லை
சமூக நோக்கர் ஒருவர் கூறுகையில், “திமுகவினர் பலன்பெறவும், ஏற்கனவே பண முதலைகளாக உள்ளவர்கள் லாபமடையவுமே இலவச நிலம் உள்ளிட்ட திட்டங்கள் உதவியுள்ளன. இத்திட்டத்தில் சுமார் 6 அயிரம் ஏக்கர் நிலங்கள் சுறுட்டப்பட்டிருக்கலாம்” என்றார்.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளால் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் முதல் படியில் கூட திமுகவால் ஏற முடியவில்லை என்பதற்கு காரணம் அவர்களின் ஊழல் மலிந்திருக்கும் செயல்பாடுகள்தான். இந்தவிசயத்தைத் துருவினால், நில மோசடியில் மட்டும், பெருந்தனக்காரர்கள் சுருட்டியுள்ள நிலம் எத்தனை என்கிற உண்மை நமக்கு தெரியவரும் !
நன்றி : மாற்று.காம்