Wednesday, December 15, 2010

இணையவெளி ஒன்றுகூடி நிற்கட்டும்!

இணையவெளி ஒன்றுகூடி நிற்கட்டும்!


ற்கனவே உங்களோடு பேசியதுதான். இந்த முக்கியமான காரியத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள மீண்டுமொருமுறை வேண்டுகிறேன்.
இந்த தேசத்தின் மகத்தான மனிதரின்-  காலகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்டவரின்- வாழ்க்கை வரலாறு திரைப்படமாக டிசம்பர் 3ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது.

ambedkar poster

டாக்டர் அம்பேத்கர்!
எளிய மனிதர்களின் வாழ்வில் விளக்கேற்றிட, ஒரு மெழுகுவர்த்தியாய் வெளிச்சம் காட்டிய போராளி அவர்.
அவர் கேட்ட கேள்விகளுக்கு இன்னமும் விடையளிக்க முடியாமல் இந்த மண்ணின் மனசாட்சி தலைகுனிந்தே நிற்கிறது.
ஊடகங்களும், ஆதிக்க சக்திகளும் இந்த திரைப்படத்தை ஒரு பொருட்டாக மதிக்காது. கூடவே ஒதுக்குவதிலும், புறக்கணிப்பதிலும் தெளிவாகவும் அக்கறையாகவும் இருக்கும்.
டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் இத்திரைப்படம் முதலில் சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் ஐந்து நாட்களே காண்பிக்கப்படுகிறது. ஆல்பர்ட் திரையரங்கில் தினமும் பகல் காட்சியாக திரையிடப்படுகிறது. அபிராமி, சத்யம்,எஸ்கேப் திரையரங்குகளில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பகல் காட்சியாக காட்டப்படுகிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், எடிட்டர் லெனின் அவர்களின் உதவியால், இப்படத்தின் பிரிண்ட்டை வாங்கி, தமிழகம் முழுவதும் திரையிடவும் முயற்சி செய்து வருகிறது.
நாம், நம்மால் முயன்ற அளவுக்கு நண்பர்களிடமும், நமக்குத் தெரிந்தவர்களிடமும் இத்திரைப்படம் குறித்துப் பேசுவோம். அவரது வாழ்க்கை கூறும் செய்திகளை தமிழகம் அறியச் செய்வோம்.
அதன் ஒரு பகுதியாக, இங்குள்ள இத்திரைப்படத்தின் போஸ்டரை தத்தம் வலைப்பக்கங்களில் ஒரு விட்ஜெட்டாக உருவாக்கி காட்சிக்கு வைப்போம். (code தேவைப்படுமானால்:  <a href="http://www.flickr.com/photos/mathavaraj/5223653195/" title="ambedkar poster by Maathavaraj, on Flickr"><img src="http://farm6.static.flickr.com/5248/5223653195_defc7f4921_m.jpg" width="176" height="240" alt="ambedkar poster" /></a> )
வாருங்கள், ஊர் கூடி இக்காரியத்தைச் செய்வோம். பெரும் வணிக ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தாலும் நம் இணையவெளி அம்பேத்கருக்காக ஒன்றுகூடி நிற்கட்டும்.

நன்றி : மாதவராஜ் 

No comments:

Post a Comment