கண்களை விற்று சித்திரம் வாங்குவதா?
லைசன்ஸ் கொடுத்து கொள்ளை அடிக்கும் முறைக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயர் சூட்டினால் தவறில்லை.
ஆம் இந்தியாவைப் பொறுத்தளவில், இக்கொள்கை, 1965 காலத்திலேயே, ஏற்றுமதி வளாகங்கள் என்ற பெயரில், உருவாகியிருந் தாலும், 2000ன் இறுதியில் இருந்தே வேகம் பெறத் துவங்கியது. அதுவும் குறிப்பாக, 2005, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான, சிறப்பு சட்டத்தினை உருவாக்கி அமலாக்கத் துவங்கிய பிறகு, இடதுசாரிகளால் மட்டும் பேசப்பட்டு வந்த, வாழ்வாதாரம் மற்றும் தொழி லாளர் குறித்த பாதிப்புகளை, வேறு சிலரும் பேசுகின்றனர்.
நாடாளுமன்றத்தில், சிறப்பு சட்டத்தை மே 2005 ல் முன்மொழிந்த போது, இடதுசாரி கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி “சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கொடுக்கப்படும், வரி உள்ளிட்ட சலுகைகளைத் திரும்பப் பெறவேண்டும், சட்டத்தில், நிலம் கையகப் படுத்துவதில் பல்வேறு மாற்றங்கள் தேவை” என்பதை எழுத்துப் பூர்வமாக முன்வைத்தது.
மத்திய அரசு சிறப்புப் பொருளாதார மண்ட லத்திற்கான சிறப்பு சலுகைகளை, அறிவிக்கிற நேரத்தில், அ) பொருளாதார சுழற்சியை கூடுதலாக்குவது, ஆ). ஏற்றுமதி பொருள்க ளையும், சேவையையும் அதிகரிப்பது, இ). உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, ஈ). வேலை வாய்ப்புகளைப் பெருக்கு வது, உ). உள்கட்டமைப்புகளை வளர்ப்பது, ஊ).நாட்டின் இறையாண்மை மற்றும் ஒரு மைப்பாட்டை பராமரிப்பது, நாட்டின் பாது காப்பு மற்றும் வெளி நாடுகளுடனான நட் புறவை மேம்படுத்துவது, என்ற ஆறு முக்கிய மான கருத்துகளை, சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான சட்டத்தினை வகுக்கிற போது, அத்தியாயம் 2ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தெரிவித்துள்ளது. மாநிலத் தி.மு.க அரசு, இதுபோன்ற சிறப்புப் பொருளா தார மண்டலங்களை உருவாக்குவதன் மூலம், 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக் கப் போவதாக அறிவித்தது. இதையொட்டியே, தமிழ் நாட்டில் மாநில அரசு தொழில்கொள் கை ஒன்றையும் வெளியிட்டது. அறிவித்து 4 ஆண்டுகளாகும் நிலையில், எத்தனை லட் சம் நபர்கள் வேலை வாய்ப்பை சிறப்புப் பொரு ளாதார மண்டலங்கள் மூலம் பெற்றிருக்கிறார் கள் என்பதை மாநில அரசு வெள்ளை அறிக் கை வெளியிட்டால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான, நிறைய சட்ட சலுகைகள் குறித்த விவாதம் இன்றைய தேவை என்றாலும் அந்நிய செலா வணி, வேலை, வேலை சூழல் ஆகியவை மட்டுமே இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட சிறப் புப் பொருளாதார மண்டலங்கள் எண்ணிக்கை 2008 ல் அனுமதி பெற்றவை 570க்கும் மேல், செயல்பாட்டை துவக்கியவை 155 க்குள் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக 22 மாநி லங்களில் தீவிர ஆர்வம் காட்டப்படுகிறது. சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தவிர்த்து, அதிக முதலீடு தொலைபேசி அல்லது செல்ஃ போன் உற்பத்தியில் செய்யப்பட்டுள்ளதாக நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த, சோமா என்ற அமைப்பு இந்தியாவை ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளது. 182,042.72 மில்லியன் ரூபாய் தொகையானது கடந்த 15 ஆண்டுகளில், 43 நாடுகள் மூலம் இந்தியா வில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தொலைபேசி ஒழுங்காற்று ஆணையம் (ட்ராய்), தெரிவித்துள்ள தகவல்படி, மாதம் தோறும் செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 60 லட்சம் பேர் அதிகரிப்பதாக சொல்கிறது. 2008 ம் ஆண்டுக்குள் இந்தியா வில் செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண் ணிக்கை, 25 கோடியாக உயரும் என கூறப் பட்டது. தற்போது செல்ஃபோன் பயன்படுத்து வோர் எண்ணிக்கை சுமார் 36 கோடி என மதிப்பிடப்படுகிறது. உலக உற்பத்தியாளர்கள் உள்ளூரிலேயே உற்பத்தியும், சந்தையும் இருந்தால் மிகவும் நல்லது என எதிர்பார்க் கிறார்கள். அப்படி அமைந்து விட்டால் உடன டியாக தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள். இந்த வர்த்தக அடிப்படையிலேயே, இந்தியா வில் செல்ஃபோன் உற்பத்தி நிறுவனங்க ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒட்டுமொத்த திருப்பெரும்புதூரில் ஆட் டோமொபைல் மற்றும் மின்னணு சாதன உற் பத்தி என சுமார் 1 லட்சம் தொழிலாளர் பணி புரிவதாக மதிப்பிடப் படுகிறது. தி.மு.க. அரசு சொன்ன 20 லட்சம் வேலை வாய்ப்பு எப் போது உருவாகும் என தெரியவில்லை. சமீபத் தில் தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை, என அவசரச் சட்டத்தினை முன்மொழிந்திருக்கிறது, மாநில அரசு. ஆனால், ஆங்கிலம் தெரியாது என்ற காரணத்தை முன் வைத்து மேற்படி நிறுவனங்கள், உள்ளூர் இளைஞர்களை வேலைக்கு எடுப்பதில்லை, என்ற புகார், திருப்பெரும்புதூர் பகுதி இளை ஞர்களிடம் இருப்பதாக சோமோ அமைப்பு தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வேலை, அந்நிய செலாவணி ஆகிய தனது இரண்டு பிரதான இலக்குகள் குறி தவறிப்போவது குறித்தே, கவலை கொள்ளாத அரசு, தொழிலாளர் நலன் பற்றி அக்கறை கொள்ளுமா? 53 பக்கங்களில், சிறப்புப் பொரு ளாதார மண்டலத்திற்கான விதிமுறைகளை, உருவாக்கிய அரசு, தொழிலாளர் நலன் குறித்து, எதுவும் குறிப்பிடவில்லை. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஏதாவது பிரச்சனை முன்னெழுந்தால், அங்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக் கும் ஆணையர், அப்பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார், எனச் சொல்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி, “இந்த சிறப்பு ஆணையர் தேவையில்லை. மாறாக, சர்வ தேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டதைப் போல், வளர்ச்சி ஆணை யருக்கும், குறை தீர்க்கும் அதிகாரிக்குமான அதிகாரங்கள் வேறுபடுத்தி காட்டப்பட வேண்டும். மேலும் தற்போது, பிரிவு 5ல் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்குப் பதி லாக, பிரதான விதிகளிலேயே தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும்” எனவும், “கூட்டு பேர உரிமை மற்றும் தொழிற்சங்க உரிமைகள் உத்திரவாதம் செய்யப் பட வேண்டும்” எனவும் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே தொழிலாளர் உரிமைகளைப் பாது காக்கும் எந்த ஏற்பாடும், மேற்படி மண்டலங் களில் இல்லை. கடந்த அக்டோபர் 31 இரவு ஷிப்டுக்குச் சென்ற அம்பிகா என்ற பெண், பணி நேரத்தில் இயந்திரத்தில் சிக்கி இறந்துள்ளார். இயந்திரத்தை உடைத்து, உயிரைக்காப்பாற்றி இருக்கலாம். விலை மதிப்புமிக்கது உயிரா? இயந்திரமா? என்ற பட்டிமன்ற விவாதத்தில் அம்பிகா இறந்து போனார். இது நடந்தது, நோக்கியா நிறுவனத்தில், அங்கு தொ.மு.ச. என்ற தி.மு.க.வின் தொழிற்சங்கம் தான் இருக் கிறது. திமு.க யார் பக்கம் நின்று வாதாடும் என் பதை, நெய்வேலி போராட்டமும், ஃபாக்ஸ் கான் போராட்டமும் தமிழ் கூறும் நல் உலகத் திற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், பணிபுரியும் தொழிலாளர்களில், பெரும் பான்மையினர் பெண்கள். திட்டமிட்டு சேர்க் கப்படுகின்றனர். ஏனென்றால், திருமணமா காத இளம்பெண்கள், இது போன்ற பணி களில், ஈடுபடும் போது, தொழிற்சங்கம் உள் ளிட்ட தொந்தரவுகளில் ஈடுபட மாட்டார்கள் என்பது, முதலாளிகளின் கணக்கு. உழைப் புச் சுரண்டலுடன், பாலியல் சுரண்டலையும் சில வேலைகளில் அரங்கேற்று கின்றனர். ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களில், பெண்களை வார்த்தைகளால், கொடுமைப் படுத்தும் நிகழ்வுகள் இருப்பதாக சோமாவும் குறிப்பிட்டுள்ளது. பெண் தொழிலாளர் என் றால் சம்பளம் குறைத்து கொடுக்கலாம் என் பது நீண்ட நாட்களாக இந்திய சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சுரண்டல் நடை முறை. இதை உலக முதலாளிகளுக்கும், ஆள்வோர் பட்டுக்கம்பளம் விரித்து அறிமுகம் செய்கிறார்கள்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோர் யார் என்பதை, ஐ.நா. சபை தீர்மானிக்கிறபோது, நாளொன்றுக்கு 2 டாலருக்கும், குறைவான வருமானம் உடையவர் என வரையறை செய் துள்ளது. இந்த வரையறைக்கு எந்த விதமான வலியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கா கவே, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சம்பளத்தை தீர்மானிக்கிற போது, 2.1 டாலர், அதாவது 3000ல் இருந்து 4500 ரூபாய் என நிர்ணயிக்கின்றனர். மூன்றாண்டுகளுக்கும் மேலாக சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த் தை நடத்தாமல், தொழிலாளர்களை சுரண்ட மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கின்றன. பிரிட் டிஷார் அல்லது இதர ஐரோப்பியர்கள், இந்தியாவில் இருந்து, கனிம வளங்களையும், செல்வங்களையும் சுருட்டி எடுத்துச் சென்ற தால், இப்போது உலக முதலாளிகளுக்கு, மனித வளத்தைச் சுரண்டும் வேட்டைக் காடாக இந்தியா அனுமதிக்கப்படக்கூடாது. எனவேதான் போராட்டம் தவிர்க்க முடியாத தாக உள்ளது. போராட்டத்திற்குப் பின்னர் தான், தொழிலாளி மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிய வரு கிறது. மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிட்டதைப் போல், தொழிலாளர்களைப் பாதுகாக்கும் ஏற் பாடுகளுடன், தொழிற்சாலைகள் துவங்கப் படுவதே சரியானது. கண்களை விற்று சித் திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ என்பதை நினைவில் கொள்வது நல்லது.
நன்றி : மாற்று.காம்
No comments:
Post a Comment